Tamilnadu

News April 3, 2024

காரைக்காலுக்கு மத்திய தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

புதுச்சேரி பாராளுமன்ற முன்னிட்டு காரைக்காலுக்கு மத்திய தேர்தல் பார்வையாளராக அசித்தா மிஸ்ராவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் விருந்தினர் மாளிகையில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம். மேலும் 04368-293100 மற்றும் 94439 91408 என்ற எண்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.

News April 3, 2024

தூத்துக்குடி: பேக்கரிக்கு சீல் வைப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவர் பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடம் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், காலாவதியான பொருட்கள் இருப்பதையும் கண்டுபிடித்ததால் பேக்கரியை மூடி சீல் வைத்தனர்.

News April 3, 2024

முதல்வருக்கு நினைவு பரிசு

image

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் எ.வ.வேலு நினைவுப் பரிசினை வழங்கினார். இதில், அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News April 3, 2024

ஜூன் 4 புதிய இந்தியாவின் விடுதலை 

image

சோமாசிபாடி பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதில்,  ஜூன் 3 கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, ஜூன் 4 மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய இந்தியாவின் விடுதலை தொடக்க விழா நடைபெறும்” என்று தெரிவித்தார். 

News April 3, 2024

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமசிப்பாடி – காட்டாங்குளம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை ஆரணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

ஆம்பூர்: இப்தார் நோன்பு திறப்பு

image

ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை தமிழ்நாடு வணிகர் சங்க சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,  வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ அப்துல் பாசித், சமூக ஆர்வலர்கள்,  ஆம்பூர் பகுதியை சேர்ந்த வர்த்தக நிறுவன தலைவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

மதுரை: சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம்

image

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் 1-9 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல்.23-ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 24-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

புதுவையில் 10,23,699 லட்சம் வாக்காளர்கள்

image

புதுவை மக்களவைத் தேர்தலில் 26 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் பேசியது, புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, புதுவை மாநிலத்தில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் தகவல் சீட்டு வரும் 5ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.

News April 3, 2024

வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மார்ச் மாதம் வரை வியாழக்கிழமைகளில் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை வியாழக்கிழமைகளில் இயங்கும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

News April 3, 2024

கோவையில் இன்று 101 டிகிரி வெயில்

image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.இந்த நிலையில் இன்று (ஏப்.03) தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியுள்ளது . இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!