India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவகோட்டை அருகே சீனமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயியின் 13 வயதுடைய சிறுமியிடம் வீட்டிற்கு பைப் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு பாலியல் துன்புறுத்தியதாக சிறுமியின் தாய் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் புளியங்குடி பட்டியை சேர்ந்த சுரேஷ் (24) மீது (ஏப்ரல்.02) நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரியில் அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் புதுச்சேரியில் பட்டியலை வைத்துக்கொண்டு வீடு வீடாக ரூ.500, ரூ.1000 என்று பணம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறார்கள் புதுச்சேரியில் தேர்தலில் சமநிலை இல்லை எனவே நடைபெற உள்ள வாக்கு பதிவை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என மாநில செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று மதுரை மேலூர் அருகே உள்ள கிராமங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன். ஊர்மக்கள் உற்சாகமாக மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.

புகலூர் அருகே நொய்யல் பகுதியில் காய்ச்சல் குறித்த மருத்துவ பரிசோதனை முகாம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற 5 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதனையொட்டி நேற்று காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் வேட்பாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் அச்சடிக்கப்பட்ட பட்டியல் இன்று (ஏப்ரல் 3) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது. இதனை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மிகுந்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கிவைத்தனர்.

கோவை பாஜக மக்களவை வேட்பாளர் அண்ணாமலை தெப்பக்குளம் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், மீனவ மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பின்பு உண்மை தெரிந்துள்ளது. தந்தை பெயர், தாத்தா பெயர் வைத்துக் கொண்டு கொச்சையாக பேசும் உதயநிதிக்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். அவரை போதை உதயநிதி என நாளை முதல் கூப்பிடுகிறோம் என்றார்.

மதுரை சித்திரைத் திரு விழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது உயரழுத்த மோட்டார் பொருத்திய பம்பை பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பாரம்பரிய ஆட்டு தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட கை பம்புகளை பயன்படுத்த உத்தரவிட்டது. தல்லாகுளம் நாகராஜன் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மதர் குளோப் ரெவல்யூஷனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் திருநகரில் ஏப்.,10 முதல் மே 31 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 82206 67830ல் தொடர்பு கொள்ளலாம் என அகாடமி தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் 10 கிராமங்களில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.இராசா இன்று (ஏப்ரல் 3) காலை 10.30 மணியளவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், திமுக தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.