India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.

கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அழகர் கோவிலில் இன்று பங்குனி மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ அழகு முத்து அய்யனார், ஸ்ரீ பூரணி அம்பாள், ஸ்ரீ பொற்கலை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சீர்காழி அடுத்த கொண்டல் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று பொதுமக்களிடையே கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவருக்கு திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் தலைமையில் திமுகவினர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன், எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் கூடுதலாக தலா ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது .இதற்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,624 ஆக உயர்ந்துள்ளது.

2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வாக்குச்சாவடி மையங்கள் அமையவுள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் வடிவேல் முருகன் , வில்சன்தேவதாஸ் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அருப்புக்கோட்டை அருகே மலை பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). பஞ்சாலை தொழிலாளியான முத்துராஜ் மல்லம்பட்டி கண்மாய் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த வழக்கில் விசாரணை செய்த தாலுகா போலீசார் முத்துராஜை கொலை செய்ததாக
17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை நேற்று மார்ச் 31 கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு முத்துராஜ் இணங்கவில்லை என்பதால் அவர்கள் முத்துராஜை கொலை செய்தது தெரியவந்தது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 1) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் எஸ்.இப்ராஹிம் இன்று திருச்சியில் பேட்டியளித்தார்.அதில், கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்பொழுது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சியிடம் வருமான வரியை கட்ட சொல்வது, தேர்தல் நேரத்தில் நெருக்கடியை கொடுப்பதற்காக செய்யப்படுகிறது என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் கீழ், நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு ரூ. 1,770 கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.