India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியதாக உள்ளது.இந்த சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் தடுப்பு சுவர் கட்டியதால் ஆத்திரமடைந்த இப்பகுதியினர் தடுப்புசுவரை அகற்ற கோரி நகராட்சி குப்பைவண்டியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புது மடத்தில் SDPI – அஇஅதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று (ஏப்ரல் 1) திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயப்பெருமாள் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டார்.

ஶ்ரீவைகுண்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தாமாகா கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது “மீண்டும் மோடி பிரதமராக வருவார். அப்போது இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் மாறும்” என்று அவர் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் எல்லை பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக வாகன சோதனை செய்தனர். இதே போல் பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நகர உட்கோட்ட பகுதியில் வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் பாதுகாப்புக்காக வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினரின் அணி வகுப்பு இன்று நடைபெற்றது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜகவர் தலைமையில் அணிவிப்பு நடைபெற்றது.

கோட்டூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தார். இம்மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு மனுதாரர் மனுவை சிவகங்கை கலெக்டர் பரிசீலனை செய்து நாளைக்குள் உரிய உத்தரப் பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி (ம) கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.அரங்கநாதன் உள்ளனர்.

ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் புதியதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் சிறிய வகை வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் நிறைவு பெறாமல் பாதியிலேயே திறக்கப்பட்டது. தற்போது கனரக வாகனங்கள் செல்வதால் மேம்பாலம் பாதிக்கும் வகையில் உள்ளது. நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வலியுறுத்தி பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/04/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பொட்டா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.