India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் எஸ்.இப்ராஹிம் இன்று திருச்சியில் பேட்டியளித்தார்.அதில், கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்பொழுது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சியிடம் வருமான வரியை கட்ட சொல்வது, தேர்தல் நேரத்தில் நெருக்கடியை கொடுப்பதற்காக செய்யப்படுகிறது என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் இன்று ( ஏப்ரல் 1) தொடங்கியது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட பிரிவின் கீழ், நீச்சல் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி முகாம் இன்று முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு ரூ. 1,770 கட்டணம் ஆகும். மேலும் விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

வாணியம்பாடி பகுதியில் வேலூர் திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நியூடவுன் பஸ் நிறுத்தம் அருகே பெண்ணின் பையை மர்ம ஆசாமிகள் யாரோ பறித்து சென்றனர்.அப்போது அந்த பெண் கூச்சல் போடவே அங்கிருந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.இதனால் அந்த பையில் வைத்து இருந்த 7 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது வாணியம்பாடி போலிசார் விசாரிக்கின்றனர்.

மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சகத்தின் கீழ் நேரு யுவகேந்திரா மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி ஆணையம் இணைந்து புதுச்சேரியில் கடற்கரை சாலையை சுத்தப்படுத்தும் “எனது பாரதம் – தூய்மை பாரதம்” என்கின்ற தலைப்பில் துப்புரவு முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாநில இயக்குனர் மற்றும் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரதீப், குமார் பேசியதாவது ,இலவச பொருட்களை வழங்குவது தண்டனைக்குரியது என்று அறிவித்தார்.

தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 854 வாக்குச்சாவடி மையங்களில்1722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்றத் தொகுதி வீடூர் கிராமத்தில் வேட்பாளர் அ.கணேஷ் குமாருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார் மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இதில் பா. ம. க நிர்வாகிகள்,பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

தஞ்சாவூர்: ஆடுதுறை பகுதியை சேர்ந்த மணிபாரதி என்பவர் வேலையை முடித்துக்கொண்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென வந்த 4 பேர் அவரை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்த பணம், மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அப்துல்ரஹீம் (19), வருண் ( 20) சதீஷ் ( 19),முகமது ரோஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் மகன் பாண்டி (45), இவர் ராமநாதபுரத்தில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு மது அருந்தி விட்டு குடி போதையில் நயினார் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே படுத்து தூங்கி உள்ள நிலையில் இறந்துள்ளார். அவரது மனைவி கிருஷ்ணவேணி புகாரில் உடலை கைப்பற்றி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் தற்பொழுது தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் வேட்பாளரை ஆதரித்து அதிமுக பேச்சாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் நாளை (ஏப்.2) மாலை 6:00 மணியளவில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு பிரச்சார மேற்கொள்ள உள்ளார். இதில் அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.