Tamilnadu

News April 1, 2024

பூத் சிலிப் வழங்கிய ஆட்சியர்

image

கோவை, புலியகுளம் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024ல் வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.1)நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி ஆகியோர் உள்ளனர்.

News April 1, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

image

மக்களவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி , தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் , காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.

News April 1, 2024

அழகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அழகர் கோவிலில் இன்று பங்குனி மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ அழகு முத்து அய்யனார், ஸ்ரீ பூரணி அம்பாள், ஸ்ரீ பொற்கலை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

News April 1, 2024

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிறப்பு வரவேற்பு

image

சீர்காழி அடுத்த கொண்டல் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று பொதுமக்களிடையே கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அவருக்கு திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன் தலைமையில் திமுகவினர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன், எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தூத்துக்குடி: கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் கூடுதலாக தலா ஒரு வாக்குச்சாவடிகள் அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது .இதற்கு தேர்தல் ஆணையம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,624 ஆக உயர்ந்துள்ளது.

News April 1, 2024

திண்டுக்கல் ஆட்சியர் அதிரடி ஆய்வு

image

2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வாக்குச்சாவடி மையங்கள் அமையவுள்ள பள்ளிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர்கள் வடிவேல் முருகன் , வில்சன்தேவதாஸ் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News April 1, 2024

அருப்புக்கோட்டை அருகே 4 பேர் கைது

image

அருப்புக்கோட்டை அருகே மலை பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). பஞ்சாலை தொழிலாளியான முத்துராஜ் மல்லம்பட்டி கண்மாய் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.‌ இந்த வழக்கில் விசாரணை செய்த தாலுகா போலீசார் முத்துராஜை கொலை செய்ததாக
17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை நேற்று மார்ச் 31 கைது செய்தனர்.‌ ஓரினச்சேர்க்கைக்கு முத்துராஜ் இணங்கவில்லை என்பதால் அவர்கள் முத்துராஜை கொலை செய்தது தெரியவந்தது.

News April 1, 2024

வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று (ஏப்ரல் 1) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News April 1, 2024

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

error: Content is protected !!