Tamilnadu

News April 1, 2024

ஆம்பூர் அருகே பயங்கர தீ விபத்து!

image

ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் சென்னை பெங்களூர் சாலையில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அக்பர் பாஷா என்பவர் பழைய பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென அருகில் இருந்த டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் மீது மர்மநபர்கள் சிலர் இன்று தீ வைத்ததால் சாலையில் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டனர்.

News April 1, 2024

ரூ.24 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

image

துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஒரு பயணியின் வயிற்றில் கடத்தி வரப்பட்ட ரூ.24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

திமுக சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு

image

நாகை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேளாங்கண்ணி திமுக பேரூர் கழகம் சார்பில் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பணி மனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News April 1, 2024

தேனி: 1,202 கன அடி நீர் வெளியேற்றம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் முறை பாசனத்தின் படி திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக ஒருபோக பாசன நிலங்களுக்கு நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று 1,130 கன அடி தண்ணீர் பாசனத்திற்கும், 72 கனஅடி தண்ணீர் குடிநீருக்கும் மொத்தம் 1,202 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

News April 1, 2024

மதுரைக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரம்

image

மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் 2751 வாக்கு சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 16 வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே இடம் பெறும். ஆனால் மதுரை தொகுதியில் 21 பேர் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 1, 2024

புதுவையில் திறந்த ஜீப்பில் எம்பி தேர்தல் பிரச்சாரம்

image

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் இந்திராநகர் தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். திலாசுப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்து திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். 

News April 1, 2024

திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் 

image

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று INDIA கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திறந்தவெளி வேனில் நின்றவாறு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

News April 1, 2024

ஈரோட்டில் ரூ.2.60 கோடி பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வரை ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 386-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு , 1 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 ரூபாய் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

நுகர்வோர் ஆணைய தலைவரின் காரில் ரூ.80,200 பறிமுதல்

image

திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே தேர்தல் கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 வைத்திருந்தால் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

விழுப்புரம் : தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் உள்ள கொளத்தூர் ஊராட்சி , பெரியசெவலை பகுதிகளில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காந்தலவாடி ஜெ. பாக்யராஜுக்கு ஆதரவாக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய கழக செயலாளர் (தெற்கு) ராமலிங்கம் தலைமையில் இன்று வாக்கு சேகரித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

error: Content is protected !!