India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செல்போன் டவர் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் டவர் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று மார்ச் 31 காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே 41வது பொருட்காட்சி நடைபெற அரசு தடை விதித்திருப்பது தெரிந்தும் அரசு உத்தரவை மீறி பொருட்காட்சி நடைபெற உள்ளது என சிலர் போஸ்டர் ஒட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் ஓசூரில் பிரஷர் லோகேஷ் குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருவண்ணாமலை தொகுதி வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. பிரியதர்ஷினி மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வேலூர் அருகே மேல்பட்டியை சேர்ந்தவர் சசிலேகா (19) இவர் அதே பகுதியில் வசித்து வரும் வாலிபரை காதலித்து வந்த நிலையில் உறவினரான தாய்மாமனை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். இன்று (ஏப்.1) மேல்பட்டி வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலப்புழா – சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள்
நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறையை அடுத்த எலையாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (58). இவர் சேலம் ரயில்வேயில் சுமைத்தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த கார் லோகநாதன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருக்கல்யாணத்தை காண, தரிசன டிக்கெட் பெறுவதற்கான ஆன்லைன் பதிவு வரும் (09.04.24) அன்று தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.