Tamilnadu

News April 1, 2024

இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/04/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா, சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பொட்டா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

அம்மா மருந்தகம் 5 நாட்கள் மூடல்

image

நெல்லை சந்திப்பு கூட்டுறவு பண்டக சாலை அருகே கூட்டுறவுத்துறை மூலம் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. தற்பொழுது ஏப்ரல் ஒன்று முதல் 5ஆம் தேதி வரை புதிய கணக்கு தொடங்க இருப்பதால் கடந்த ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கைகள் ஆடிட்டர் மூலம் தாக்கல் செய்யப்பட இருப்பதால் அதுக்குள்ளான பணிகள் நடைபெறுகிறது. இதனால் அம்மா மருந்தகம் ஏப்ரல்-1 முதல் ஏப்ரல்5-ம் தேதி வரை மூடப்படும் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 1, 2024

அரியலூர்: வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவு

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படைகள் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் மற்றும் நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மேற்கொள்ளும் கண்காணிப்பு பணிகளையும் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News April 1, 2024

வெயிலின் தாக்கம் 102.7 டிகிரியாக பதிவு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-01) மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 1, 2024

சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி

image

திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் கிகேட்டோ சேம மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தனர்.

News April 1, 2024

ஈரோடு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு படிவம்

image

ஈரோடு எஸ்கேசி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவியர்களிடம் மக்களவைத் தேர்தலுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் மற்றும் கூடுதல் ஆட்சியர் கலந்து கொண்டனர்

News April 1, 2024

தேனி: ஆட்சியர் ஆய்வு

image

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிபுரம் பேரூராட்சி ஆதிபட்டி பகுதியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று (ஏப்.1) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

News April 1, 2024

பூத் சிலிப் வழங்கிய ஆட்சியர்

image

கோவை, புலியகுளம் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024ல் வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.1)நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி துணை ஆணையர் செல்வ சுரபி ஆகியோர் உள்ளனர்.

News April 1, 2024

திண்டுக்கல்: வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

image

மக்களவை தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி , தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் , காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!