Tamilnadu

News April 2, 2024

திருச்சி:பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரித்த அமைச்சர

image

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் இன்று மாலை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், இந்திய கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

News April 2, 2024

காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி 

image

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அறச்சலூர் அருகில் உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள சொர்ணபைரவர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மக்கள் கலந்து கொண்டு காலபைரவரின் ஆசியை பெற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News April 2, 2024

தஞ்சை அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

image

சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள பேராவூரணி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2, சார்பில், சிறப்பு முகாம் தொடக்க விழா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்

News April 2, 2024

புதுச்சேரியில் இன்று மின்தடை 

image

புதுச்சேரி, ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மணல்மேடு மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (ஏப்ரல்-2) நடைபெறுகிறது.
இதனால், கல்மண்டபம், பண்டசோழநல்லூர் (ஒரு பகுதி), வடுகுப்பம், பனையடிகுப்பம், கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.

News April 2, 2024

தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, பள்ளிகொண்டா அருகில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் “எடப்பாடி” பழனிசாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் டாக்டர். பசுபதி அவர்களுக்கு வாக்குகளை சேகரித்தார்.

News April 2, 2024

பந்தலூர் பகுதியை சேர்ந்த இளைஞர் லாடாக் வரை சைக்கிளில் பயணம் !

image

நீலகிரி மாவட்டம், பந்தலூர், அம்மன்காவு கிராமத்தில் இருந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு ஆகியவற்றை வழியுறுத்தி கொளப்பள்ளியில் இருந்து சைக்கிள் பயணமாக கன்னியாகுமரி சென்று அங்கிருந்து லடாக் ,நேபாளம் வரை சைக்கிளில் பயணம் செய்ய உள்ள ஶ்ரீ சிவ பிரகாஷ் என்ற இளைஞர் இவரின் பயணத்திற்க்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News April 2, 2024

185 விளம்பர பேனர்கள் அகற்றம்

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்கும் விதமாக ஐந்து மண்டலங்களிலும், கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள், 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள், அகற்றினர்.

News April 2, 2024

கணினி மூலம் பணி ஒதுக்கீடு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.

News April 2, 2024

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகளால் மொத்தம் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1,91,67,955 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் 52 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு ரூ. 1,44,91,265 ரொக்கம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 21,50,82,357 மதிப்பிலான தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே புனித செபஸ்தியார் தேர்த் திருவிழா!

image

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக திருச்சிலுவை கொடியானது ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இசை முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

error: Content is protected !!