Tamilnadu

News April 2, 2024

வேலூர் முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

image

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (ஏப்ரல் 2) தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News April 2, 2024

திண்டுக்கல்: பாட்டு பாடி வாக்கு கேட்ட சீமான்

image

பழனி ஆயக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பொதுமக்கள் முன்பு பேசிய சீமான் அண்ணாமலை தன்னை காப்பி அடித்து பேசுவதாக குற்றம் சாட்டினார். பாஜகவின் பி டீம் இல்லை பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் பி டீம் என விமர்சனம் செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் பாட்டு பாடி மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

News April 2, 2024

திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் திடீர் ரெய்டு

image

உடுமலை தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள அணிக்கடவு கிரி வீட்டில் நேற்று (ஏப்ரல் 1) மாலை 6 மணியிலிருந்து வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் வீட்டில் திடீரென வருமானவரித்துறை சோதனை செய்தது உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News April 2, 2024

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வரும் 9-ம் தேதி துவக்கம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி அம்மனுக்கு பூச்செரிதல் நிகழ்ச்சியும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகின்றது . 11 தேதி கம்பம் போடுதல் ,18ம் தேதி கொடியேற்றம், பூவோடு ஆரம்பம் 24ஆம் தேதி அதிகாலை மாவிளக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

News April 2, 2024

காஞ்சி அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஶ்ரீபெரும்புதூர் அருகே சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). இவர் தனது மனைவி, பேரனுடன் தனது இருசக்கர வாகனத்தில் சிவன்தாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தார்.

News April 2, 2024

வனவாசி: ரூ.2 லட்சம் மதிப்பிலான புடவைகளை பறிமுதல்

image

சேலம், மேட்டூர் வட்டம், வனவாசி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இளம்பிள்ளையில் இருந்து நங்கவள்ளி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய அனுமதியின்றி ரூ.2 லட்சம் மதிப்பிலான 75 விலை உயர்ந்த புடவைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அதனை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

காங்கிரஸில் புதிய நிர்வாகி நியமனம்

image

பெரம்பலூர் தந்தை ரோவர் கல்வி, சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் துணைத்தலைவராக இருப்பவர் ஜான் அசோக் வரதராஜன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம், தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை ராகுல்காந்தி ஒப்புதலுடன் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், மாநில பொதுச்செயலாளர் இவருக்கு நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

News April 2, 2024

கூத்தாநல்லூரில் திருடிய நபர் கைது

image

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கடைவீதியில் உள்ள கடை ஒன்றில் எச்பி மோட்டார் திருடப்பட்டதாக கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு  லட்சுமாங்குடி மேல தெருவை சேர்ந்த கண்ணையன் என்பவரது மகன் ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2024

முதல் முறை வாக்காளர்களுக்கு கடிதம்

image

நாகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை-2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி அகரகொந்தகை கிராமத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், கையெழுத்திட்ட நேர்முக கடிதத்தை அஞ்சலில் அனுப்பி வைக்க வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைத்தார்.

News April 2, 2024

உண்மையை மறைத்தவருக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது

error: Content is protected !!