Tamilnadu

News April 2, 2024

கோவை: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.12 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து: 2 பேர் பலி

image

தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன் (25). இவரும், பிரவீன் பால்ராஜ் (25) என்பவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது தேன்கனிக்கோட்டை பகுதியில் அவ்வழியாக சஞ்சய் (22) என்பவர் ஓட்டிவந்த டூவீலர் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சய் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பிரவீன் பால்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 2, 2024

ஏப்ரல் 5இல் அமித்ஷா குமரிக்கு வருகை

image

கன்னியாகுமரி மாவட்ட பாஜக அணி/பிரிவு மையக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க ஏப்ரல் 5ஆம் தேதி தக்கலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News April 2, 2024

மதுரை: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

மதுரையில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.56 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

கமல் பிரசாரம் செய்ய உள்ள இடம் ஆய்வு

image

பெரம்பலூர் சங்கு பேட்டை பகுதியில் இன்று மாலை 5 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமலஹாசன், பெரம்பலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனை முன்னிட்டு அவர் பிரச்சாரம் செய்ய உள்ள இடத்தை, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என்.நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

News April 2, 2024

திருவாரூரில் ஒருவர் மீது குண்டாஸ்

image

திருவாரூர், குடவாசல் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் குருவி குருசக்தி (39) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் உடையவர் என்பதால் மாவட்ட எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில் குருசக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News April 2, 2024

சர்வதேச சதுரங்கப்பட்டியலில் இடம் பெற்ற நாகை மாணவி

image

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமொழி, கவிதா தம்பதியினரின் மகள் மகதி சர்வதேச சதுரங்க பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு பயிலும் இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், இவர் நாகை மாவட்ட அளவில் சர்வதேச சதுரங்கப்போட்டியில் இடம்பெற்ற முதல் பெண் சதுரங்க ஆட்டக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

தர்மபுரியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

ஈரோட்டில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 104.72 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 2, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

திருப்பத்தூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!