Tamilnadu

News August 16, 2025

சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25)  இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட 
 காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News August 16, 2025

ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News August 16, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

திருப்பூர்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

image

சென்னை பல்லாவரத்தில் இன்று 9ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு
கழுத்தை அறுத்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து பல்லாவரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 16, 2025

வேளாண் உட் கட்டமைப்புக்கு ரூ.66 கோடி இலக்கு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் வேளாண் உட் கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடி இலக்கு நிற்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மகளிர் திட்டத்திற்கு தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி! APPLY NOW

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

குற்றாலம் அருவியில் மீண்டும் குளிக்க தடை

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வனப்பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது நீரின் தாக்கம் குறைவதால் அறிவியலில் சுற்றுலா பின்னணி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் குற்றால பிரதான அருவிகளில் தற்பொழுது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருவதை தொடர்ந்து 16ம் தேதி இரவு 7 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

திருவள்ளூரின் முதல் ரயில் சேவை எது தெரியுமா?

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை 1856ம் ஆண்டு ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு இயக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரண்டாவது ரயில் திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது. முதலில் இயக்கப்பட்டு இருந்தால், தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை இயக்கப்பட்ட பெருமை திருவள்ளூருக்கு கிடைத்திருக்கும். தற்போதும் இரண்டாவது ரயில் சேவை, திருவள்ளூரின் முதல் ரயில்சேவை என்ற பெருமை உள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!