India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று அதிகாலை லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் முகமது இம்ரான்(37)
என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பட்டப் பகலில் கடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை தாளவாடி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மக்களவை பொதுத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். இதில் பொது தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1491 ஓட்டு சாவடிகளுக்கு 1795 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1944 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான கிட்டங்கி நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் உள்ளது.நெல்லையில் உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இணைய வழி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு பெற்றது என ஆட்சியர் நேற்று (மார்ச் 22) தெரிவித்தார்.

சிவகங்கை மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை(24.03.2024) அன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இப்பயிற்சியினை திறம்பட பெற்று, தங்களுக்கான தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரில் சோதனை செய்தபோது அதில் 1 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி சாகர் மற்றும் மலை மாவட்டமான ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது நீலகிரி மக்களவை தொகுதி. தேர்தல் தலைமை அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இங்கு நேற்று வரை 3 நாட்கள் ஆகியும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

விழுப்புரம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி முதல் இரண்டு நாட்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று (மார்ச் 22) உளுந்தூா்பேட்டை வட்டம், பாண்டூா் புதுகாலனியைச் சோ்ந்த கேசவன் மகன் அரசன் (72) விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊ.ஒ.ந.நி பள்ளியில் நேற்று (மார்ச் 22) உலக நீர் தினம் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரதீபா தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. நீரின் சேமிப்பு, அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கவிதை, சுலோகன், பேச்சுப் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இறுதியில் நெகிழி பையை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 22) பிளஸ் 2 தேர்வு முடிந்தது. நெல்லை மாவட்டத்திலும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ மாணவிகள் தங்கள் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர்கள் கூறும் போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு செல்லும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.
Sorry, no posts matched your criteria.