Tamilnadu

News March 23, 2024

நெல்லை: பிரச்சாரம்… நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

image

திருநெல்வேலி எம்எல்ஏவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரன் நெல்லை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து அவர் தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இன்று (மார்ச் 23) காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் மோடி பிரதமராகவும் தமிழகத்தில் அதிக தொகுதியில் வெற்றி பெற வேண்டியும் தரிசனம் செய்தார்.

News March 23, 2024

வருமானவரித்துறை சார்பில் புதிய கட்டுப்பாட்டு அறை

image

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை பொன்னேரி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 1800 4256669 என்ற இலவச எண் மற்றும் 9445394453 புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் விவரம்

image

நீலகிரி மக்களவை தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1963இல் பிறந்த இவரின் முழு பெயர் ஆண்டிமுத்து ராசா. இதுவரை மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இதுவரை தலா 4 முறை பெரம்பலூர், நீலகிரி பகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.

News March 23, 2024

முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு

image

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்த வகையில் வரும் 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வுசெய்ய, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தேவராஜா திடலினை ஆய்வு செய்தார்.

News March 23, 2024

நவாஸ் கனிக்கு ஏணி சின்னம் ஒதுக்கீடு

image

இராமநாதபுரம் எம்பி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனிக்கு மீண்டும் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட நவாஸ் கனிக்கு இம்முறையும் அதே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஏணி சின்னத்தில் வாக்குச் சேகரிப்பில் நவாஸ் கனி தீவிரமாக ஈடுபட உள்ளார்.

News March 23, 2024

சார் ஆட்சியரிடம் வாழ்த்துகள் பெற்ற வீரர்கள்

image

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பெரம்பலூர் மாற்றுத்திறனாளி வீரர்கள் மேலப்புலியூர் கலைச்செல்வன், மங்களமேடு அம்பிகாபதி, ஆதனூர் ஜீவா, புது அம்மாபாளையம் ரம்யா ஆகிய 4 பேர் 11 தங்கம், 1 வெள்ளி என 12 பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தனர். நேற்று பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலிடம் பதக்கங்கள், சான்றிதழை காண்பித்து வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் பெற்றனர்.

News March 23, 2024

நிறுவனர் ராமதாஸுடன் பாமக வேட்பாளர் சந்திப்பு

image

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சௌமியா அன்புமணி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பாமக தலைவர் அன்புமணி பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, பாமக மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் அரசாங்கம் உடன் இருந்தனர்.

News March 23, 2024

யார் இந்த பாஜக வேட்பாளர்?

image

நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திருவாரூர், சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி எஸ்.ஜி முருகையனின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ், 2022ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த இவரது செல்வாக்கை அறிந்த பாஜக தற்போது இவரை களமிறக்கியுள்ளது.

News March 23, 2024

தஞ்சையில் நடைபயணமாக சென்ற முதலமைச்சர்

image

தஞ்சையில் இன்று காலை நேரத்தில் முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்பகுதியில் பொதுமக்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

News March 23, 2024

3 கிலோ தங்கம் 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சோதனைச்சாவடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் வாகனத்தை சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3 கிலோ 600 கிராம் தங்கம், 1/2 கிலோ வெள்ளியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!