Tamilnadu

News March 25, 2024

தேர்தல் விதிமுறைகளால் பஸ், ரயில்களில் கட்டுப்பாடு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

News March 25, 2024

மதுரை எம் பி வெங்கடேசன் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட கமல்

image

மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டதாவது, மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்’
என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

News March 25, 2024

மதுரையில் கனிமொழி பிரச்சாரம்

image

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல்.19 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அதன்படி, ஏப்ரல்.4ஆம் தேதி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

News March 25, 2024

காரைக்கால்: 10ஆம் வகுப்பு தேர்வு விவரங்கள் வெளியீடு

image

காரைக்காலில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்நிலையில், எத்தனை மாணவர்கள் மற்றும் எத்தனை தேர்வு மையங்கள் என்பது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் இன்று வெளியிட்டார். இதில், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில், மொத்தம் 2,479 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

News March 25, 2024

காஞ்சிபுரம்: திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்,தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைச்செல்வி மோகனிடம் இந்தியா கூட்டணி கட்சி திமுக சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் க.செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் வரலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

News March 25, 2024

செங்கல்பட்டு: திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அவர்
கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 25, 2024

விழுப்புரம்: மூச்சுத் திணறி சிறுவன் பலி

image

சென்னை, பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி கண்ணன். இவர், நேற்று தனது மகன் ராபின்(6)-னுடன், விழுப்புரம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குளத்தில் ராபின் குளித்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News March 25, 2024

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

image

திருவையாறு சாலையில் கூத்தூர் கிராமத்தின் அருகில் திருவையாறு ஏடிஎஸ்ஓ தலைமையிலான பறக்கும் படை  குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ்ணம் பேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.67080 ரொக்கத்தை கைப்பற்றி திருவையாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணியிடம் ஒப்படைத்தனர்.

News March 25, 2024

நீலகிரி: காட்டு தீ – போராடிய தீயணைப்பு துறை

image

உதகை நகரில் மேல் தலையாட்டு மந்து என்ற இடத்தின் அருகே  மூலநகர்  பகுதி காட்டில்  இன்று பகல் ஒரு மணியளவில் காட்டு தீ ஏற்பட்டது . காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் எரிந்த தீ காற்றின் வேகம் காரணமாக மரங்களில் பரவியது . தகவலறிந்த, உதகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய குழுவினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி காட்டு தீயை அணைத்தனர் .

News March 25, 2024

கிருஷ்ணகிரி: கர்நாடகத்தினர் ஆர்ப்பாட்டம்

image

தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்போம் என தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டித்து, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஒசுர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தீவிரமடைந்தால், கர்நாடகத்தில் தமிழ் சினிமாக்கள் திரையிட விடமாட்டோம், எல்லைப்பகுதிகளை அடைப்போம் என எச்சரித்தனர்

error: Content is protected !!