Tamilnadu

News March 25, 2024

வேப்பந்தட்டையில் தேர்தல் விளம்பரம்

image

வேப்பந்தட்டை வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் 2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற இருக்கும் மக்களவை பொது தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்கவும் மற்றும் உதவிகள் பெறவும் விளம்பர நோட்டீசை வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பிரேமராணி இன்று பொதுமக்களிடம் வழங்கினர்.

News March 25, 2024

குமரி அருகே விபத்து: ஒருவர் பலி

image

குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த பொட்டல் விலக்கு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (61) .இவர் நேற்று மாலை தனது பைக்கில் பொருட்கள் வாங்குவதற்காக அத்தி கடைக்கு சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2024

சென்னையில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி

image

ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. தகுதிச் சுற்று போட்டி மே.21 இல் அகமதாபாத்திலும், இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

நாமக்கல் அருகே ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

image

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 25, 2024

திருவள்ளூர்: பணத்துடன் சிக்கிய திமுக நிர்வாகிகள்

image

பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது, காரில் வந்த மீஞ்சூர் திமுக ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகியோரிடமிருந்து ₹500 நோட்டுகள் இருந்த திமுக தலைவரின் படம் பிரிண்ட் செய்யப்பட்ட கிஃப்ட் கவர்கள் மற்றும் ₹50000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாகே சங்கத் பல்வந்த் வசம் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2024

திருச்சி ரயில்வே எச்சரிக்கை

image

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகள் சிலிண்டர், பெட்ரோல், டீசல், பட்டாசு ஆகியவற்றை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவது தண்டனைக்குரியது எனவும் எச்சரித்துள்ளது.

News March 25, 2024

கார் கண்ணாடிகளை உடைத்து செல்போன், மடிக்கணினி திருட்டு

image

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதில் பட்டுக்கோட்டை களத்தூரை சேர்ந்த பாலமுருகன் புதுக்கோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் குடும்பத்துடன் கார்களில் வந்திருந்தனர். பின்னர் அவர்கள்
சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தனர். அப்போது 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த செல்போன்கள், மடிக்கணினி, ரூ.700 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

News March 25, 2024

நடைப்பயிற்சியின் போது வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

சங்கரன்கோயிலிலில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருடன்,  திமுக தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் ஆகியோர்
சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

News March 25, 2024

விருதுநகரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் கேகேஎஸ்எஸ்என் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் பந்தல் போடும் தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் சக்திவேல்(57) கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை

image

சிதம்பரம் அருகே மேல்தவிர்த்தாம்பட்டை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது வீட்டின் அருகில் உள்ள வக்கார மாரி ஏரியில் இருந்து இன்று அதிகாலை வெளியேறிய முதலை ஒன்று செல்வகுமாரின் வீட்டிற்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 8 அடி நீளமுடைய முதலையை லாவகமாக பிடித்தனர்.

error: Content is protected !!