India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வடச்சேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று(மார்ச்.26) அதிகாலை தனியார் நிலத்தில் அரசு அனுமதி இன்றி மணல் மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து உமராபாத் போலீசார் மற்றும் ஆம்பூர் தாலுகா வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி விழாக்கள் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100% வாக்கினை செலுத்த வேண்டும் என்பன உறுதிமொழி கையொப்பமிட்டன .திருவாரூர் ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு கையொப்பமிட்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் கூத்தாநல்லூர் நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று(மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பழனி அடுத்த பெரியகலையமுத்தூரைச் சோ்ந்தவா் கோட்டைச்சாமி (48). இவா் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தாா். இவா் நேற்று டூவீலரில் பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு டூவீலர் நேருக்கு நோ் மோதியது கொண்டது. இதில் பலத்த காயமடைந்த கோட்டைச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

போடியில் நேற்று முன்தினம்(மார்.24) அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்ய வருகை புரிந்தார். அவரை வரவேற்பதற்காக போடி சாலை காளியம்மன் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்டத்துக்கு இடையே போடியை சேர்ந்த கருப்பையா என்பவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நேற்று (மார்ச் 25), திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கலியபெருமாளை அறிமுகப்படுத்தி தெற்கு மாவட்ட செயலர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். திருவண்ணாமலை, திருப்பத்துார், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்துார்,செங்கம், ஜோலார்பேட்டை தொகுதிகளில் அ.தி.மு.க. வுக்கு அதிக ஓட்டுகள் பெற்று தரும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் செயின் பரிசளிக்கப்படும் என கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவை தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி அதிமுக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தமாக 8 பேர் நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் ‘நீட்’ தேர்வு இலவசப் பயிற்சி 3 மதுரை மாநகராட்சிப் பகுதி, யானைமலை ஒத்தக்கடை, திருமங்கலம் ஆகிய பகுதிகளில், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி மையம் மாா்ச் 27ல் தொடங்கப்படும். தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும்.

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய மூவர் கடந்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இதயக்கோளாறு , ஆஸ்துமா, ரத்த கொதிப்பு இருப்பவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே நேற்று (மார்ச் 25) மாலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வகையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். இதில் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் என பலரும் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.