India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பதாவது- 2023 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேரவும், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் விண்ணப்பங்கள் மே 24 ஆம் தேதிமுதல் பெறப்பட்டு வந்தது. தற்போது காலக்கெடு ஜீன் 20 ஆம்
தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.

மேலகரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், முருகன் மற்றும் மாரியப்பன் ஆகிய மூவருக்கும் மாடசாமி கோவில் தொடர்பாக பகை இருந்துள்ளது.இந்நிலையில் 25ம் தேதி செல்வராஜ் மேலகரத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேரும் செல்வராஜை தாக்கினர். அதை தடுத்த அவரது மனைவியையும் மிரட்டியுள்ளனர் இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரில் குற்றாலம் போலீசார் 3 பேர் கைது

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்மண்டலம் குண்டுசாலையில் ஆட்டோ மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(மார்ச் 25) நடைபெற்ற மனு தாக்கலின்போது, விநோத சம்பவம் ஒன்று அரங்கேறியது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ஒருவர், நான்தான் கலெக்டர், என்னிடமே மனு கொடுக்க வேண்டும் எனக்கூறி நாற்காலியில் அமர்ந்துள்ளார். விசாரித்ததில், அவர் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி என்பது தெரியவரவே, அவரை வேறு அறையில் அமர வைத்தனர். சற்று நேரத்தில் அவராகவே எழுந்து வெளியே சென்றுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறை பிரிவு மாணவ மாணவியருக்கான சமூக சேவைகள் என்ற தலைப்பில் சமூக சேவை பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு நேற்று மாலை நடைபெற்றது. வழிகாட்டி அமைப்பின் நிறுவனர் சமூக ஆர்வலரான மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுவாழ்வில் சமூக சேவை எவ்வாறு செய்வது, சமூக சேவை பணிகளை யாருக்காக மேற்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார்.

கரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 58 தேர்வு மையங்களில் 11, 556 மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 463 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 019 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக 58 தலைமை ஆசிரியர்களும், 58 துறை அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 935 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன

ஈரோடு அடுத்த அக்ரஹாரம் இந்தியா டையிங் மில் கூட்ட அரங்கில் நாளை (மார்ச்.27) ‘நிதி ஆப்கே நிகட் ‘ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்து பயன்பெறலாம் என ஈரோடு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு புதுச்சேரி சமூக நல அமைப்புகள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ நேரு தெரிவித்தாா். இதுகுறித்து புதுச்சேரியில் நேற்று செய்தியாளா்களிடம் அவா் கூறியது மத்தியில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சியும், தற்போது ஆளும் கட்சியும் புதுவை மாநில வளா்ச்சிக்கு திட்டங்களைச் செயல்படுத்தவில்லை ஆதலால் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்

திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நெல்லை மக்களவைத் தொகுதியில் நேற்று (மார்ச் 25) மட்டும் 6 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ஏற்கனவே சுயேச்சை வேட்பாளர் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் நெல்லை மக்களவைத் தொகுதியில் இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.