India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று தமிழ் பாடப்பிரிவு தேர்வு நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற தனது நல்வாழ்த்து சமூக வலைதளம் X மூலம் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டுயிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் வருகிறார். பிரச்சாரத்திற்கு வரும் அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக கூட்டணி கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுத வந்தனர். கிருஷ்ணகிரி தூய பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வு எழுதுவதற்கு முன்பாக கூட்டு பிரார்த்தனையில் மாணவிகள் ஈடுபட்டனர். இதில் பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிவசாமி வேலுமணி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரின் பெயரில் ரூ.1.18 கோடி அசையும் சொத்துகளும், ரூ.7.55 கோடி அசையா சொத்துகளும், மனைவி ஆனந்தி பிரபா பேரில் ரூ.14.35 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என 66 தேர்வு மையங்களில் 15,953 மாணவ மாணவிகள் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட தயாராக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனை அழகு கலை பயிற்சி மார்ச் 26, 27, 28 ஆகிய 3 தினங்களில் நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தி அடைந்த ஆர்வம் உள்ள பெண்கள் முன்பதிவு செய்து பங்கு பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8668100181, 7010143022, 9841336033 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 181 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேட்பாளர் பேசிய பொழுது தாய் மற்றும் தந்தை ஆகியோரை இழந்த தனக்கு முன்னாள் அமைச்சர்கள் இரு அப்பாக்களாக உள்ளனர் என பேசிய போது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மனம் உருகி தேம்பி கண்ணீர் விட்டு அழுதார். இது கட்சியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன் நேற்று (மார்ச் 25) உதகையில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ‘நீலகிரி தொகுதியில் வெல்வது மோடிஜியா? 2 ஜியா? என்பது மக்களுக்கு தெரியும்’ என்றார்.

குமரி மக்களவை தொகுதியில் நேற்று(மார்ச் 25) வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அவர்களின் சொத்து விவரம். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.7.60 கோடி; அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும், அசையா சொத்துகள்-ரூ.8.10 கோடி, மனைவி பெயரில்-ரூ.1.04 கோடி; நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபரின் அசையும், அசையா சொத்துகள்- ரூ.4.50 கோடி, கணவர் பெயரில் – ரூ.1.14 கோடி.
Sorry, no posts matched your criteria.