Tamilnadu

News March 26, 2024

10ஆம் வகுப்பு தேர்வு: நெல்லை கலெக்டர் திடீர் ஆய்வு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கியது. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று திடீரென சென்று ஆய்வு செய்தார். தேர்வு எழுதும் மாணவர் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் குறித்து தேர்வு மையப் பொறுப்பாளர்களிடம் விசாரித்தார்.

News March 26, 2024

நாமக்கல்: தேர்தலுக்காக கூகுள் பே எண் வெளியிட்ட வேட்பாளர்

image

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன காந்தியவாதி ரமேஷ் போட்டியிடுகிறார். தனது தேர்தல் செலவுக்கு தன்னால் முடிந்ததை செலவு செய்து வருவதாகவும் தேர்தலுக்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதால் பொது மக்களாகிய நீங்கள் என் தேர்தல் செலவுக்கு பணம் தர கோரியுள்ளார். இதற்காக தனது கூகுள் பே 9994176591 எண்ணையும் சமுக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார் தற்போது இது பேச்சு பொருளாகி உள்ளது.

News March 26, 2024

நெல்லை மாணவிக்கு குவியும் வாழ்த்து

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இந்த மாணவி அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார். இந்த மாணவிக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வெட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News March 26, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு கடும் எச்சரிக்கை

image

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் சமூகத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வாசகங்கள் பதிவு செய்தாலும், கருத்து தெரிவித்தாலும், பகிர்ந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா இன்று அறிவித்துள்ளார்

News March 26, 2024

அதிமுக வேட்பாளருக்கு ரூ. 648 கோடி சொத்து மதிப்பு

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடுவதற்காக ஆற்றல் அஷோக் குமார் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது பெயரில் ரூ.583 கோடியும், தனது மனைவி பெயரில் ரூ. 65 கோடி என மொத்தம் ரூ648 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளார்.

News March 26, 2024

திருப்பூரில் பிஎஸ்என்எல் சார்பில் மெகா மேளா

image

பிஎஸ்என்எல் சார்பில் திருப்பூரில் புதன்கிழமை (மார்ச் 27) மெகா மேளா நடைபெறுகிறது. மேலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை மெகா மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட உள்ளன.

News March 26, 2024

தயார் நிலையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 26) தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி அழைப்பது போன்று பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது.

News March 26, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (மார்ச் 26) ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பாதுகாப்பு அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

News March 26, 2024

மதுரை – எச்சரிக்கும் காவல்துறை

image

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..

News March 26, 2024

மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

கள்ளக்குறிச்சி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி தலைவர்களின் திருவுருவச்சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க வெள்ளை துணிகளை கொண்டு மூடும் வேலை நடைபெற்று வந்தது இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும் துணிகளால் மூடப்பட்டது.பின்னர் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் துணிகளை எடுக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!