India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலில் (பாடைகட்டி மாரியம்மன்) புஷ்ப பல்லக்கு நடைபெறும் நாளான 31.03.2024 ஞாயிற்றுகிழமையன்றுவலங்கைமான் வட்டத்தில் செயல்படும் அரசு மதுபானக்கடை எண் 9660 மற்றும் 9627 மேலும் அதனை சார்ந்துள்ள மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த ஐயப்பன், சத்தியமூர்த்தி இருவரும் நேற்று (மார்ச்.25) மொளசூர் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கண்ணன், வசந்தகுமார் ஆகியோரது பைக் இவர்களது பைக் மீது மோதுவது போல் சென்றுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் ஐயப்பன் சத்தியமூர்த்தி இருவரையும் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி அருகே வெங்கடேஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பாள்(31), தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ்அப் செயலிக்கு மர்ம நபர், குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, சுந்தரம்பாள் பல தவணைகளாக ₹6.57 லட்சம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2022ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக அர்ஜுனன் என்பவரை நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் இன்று அர்ஜுனன் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி பகுதியில் அதிகாலை 3.00 மணிக்கு சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கி கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவி காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், “இவர் திருப்பூர் தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும்” என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு சார்பில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் கடந்த மாதம் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கரீஷ் சதீஷ் ரெட்டி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 708 கிராம் தங்க நகைகள், 36 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில் பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.