Tamilnadu

News March 27, 2024

ஈரோடு காவல்துறை தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு காவல்துறை தேர்தல் பார்வையாளராக, ராம கிருஷ்ண ஸ்வரண்கர் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரியான ராம கிருஷ்ண ஸ்வரண்கர் இன்று முதல் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாதுகாப்பு பணி ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

தென்காசி:காங்கிரஸ் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்

image

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார்
தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடாரிடம் வாழ்த்து பெற்றார்.அப்போது அவர்களுடன் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன்,நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் உள்ளிட்ட பலர் இருந்தனர்

News March 27, 2024

தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம்

image

புதுவை நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி அணியை வெற்றி பெறச் செய்வோம் என சிபிஎம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் சாரம் ஜீவானந்தம் சிலை அருகில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் சலீம், காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி, தி.க வீரமணி (ம) ராமகிருஷ்ணன் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

News March 27, 2024

தி.மலையில் 12டி படிவம் வழங்கிய கலெக்டர்

image

தி.மலையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக நேற்று வேங்கிக்கால் ஊராட்சி ஓம் சக்தி நகரில் உள்ள மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று மாற்றுத்திறனாளி நபருக்கு பழ கூடை கொடுத்து 12-D படிவத்தினை வழங்கினார்.

News March 27, 2024

நீலகிரி மாவட்ட போலீஸ் எச்சரிக்கை

image

நீலகிரி, கூடலூர், தோட்டமூலா, ஏலுமரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் நேற்று (மார்ச் 26) காலை 8.20 மணிக்கு மாரடைப்பு காரணமாக கூடலூர் GTMO மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என நீலகிரி காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் இவரது இறப்பு பற்றி பொய்யான தகவலை வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News March 27, 2024

திருப்பத்தூர்: அம்மையப்ப நகரில் கும்பாபிஷேக திருவிழா

image

நாட்றம்பள்ளி தாலுகா கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கசிநாயகன்பட்டியை அடுத்த முருகப்ப நகரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மன் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. வேத பண்டிதர்களால் யாக சாலை அமைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விழாக்குழுவினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன

News March 27, 2024

உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 26) திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டம் இருந்தது.

News March 27, 2024

புதுகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை ,பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 47 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த கற்பித்தல் மையங்களில் கற்பித்தல் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 26.3.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாஹி ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்த எஸ்.பி

image

ஏப்ரல்-19ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட முத்துப்பேட்டை, தலையாமங்கலம், கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேற்று (26.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

News March 27, 2024

சென்னை: I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, கொளத்தூர் எவர் வின் பள்ளி வளாகத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிடோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

error: Content is protected !!