Tamilnadu

News March 27, 2024

திருப்பூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையாளர்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கடந்த முறை வாக்கு சதவீதம் குறைந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் என்ற நேரில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 27, 2024

எய்ம்ஸ் தாமதம் இவரே காரணம்- விஜய பிரபாகரன்

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதமாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரே காரணம் என விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபகாரன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் பாஜக கண்டுக்கொள்ளாது. பொது வேட்பாளராக நான் வென்ற பின், அதை எப்படி வாங்குவது என்று எங்களுக்கு தெரியும் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

News March 27, 2024

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்பு மனு

image

பாராளுமன்ற தேர்தலின் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாள் ஆகும். எனவே புதுச்சேரியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் வைத்திலிங்கம் இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

நாமக்கல்லில் போஸ்டரால் பரபரப்பு 

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் தமிழ்மணி உருவம் பொறித்த போஸ்டர்கள் அதிக அளவு இரண்டு தினங்களாக ஒட்டப்பட்டுள்ளது. இது நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ளதாகவும் , இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்…

News March 27, 2024

சேலம்: பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.

News March 27, 2024

அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

image

அதிமுக சார்பில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்கு சேகரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரை வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், ஓ.எஸ் .மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

News March 27, 2024

கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

News March 27, 2024

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் மனுதாக்கல்

image

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டரும் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பாமக மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், இல.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

News March 27, 2024

விழுப்புரம்: கூரை வீடு எரிந்து நாசம்

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரும் மனைவி உமாவும் நேற்று (மார்ச் 26) வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென இவர்களது கூரைவீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த மரக்காணம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!