India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி காவல் ஆய்வாளர் பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உதவி காவல் ஆய்வாளர் பாராட்டுகளையும் மற்றும் ரூ5000 ரொக்கம் வழங்கி சிறப்பித்தார். உடன் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பலர் உள்ளனர்.

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55)என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றார. இதையடுத்து பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி கேகே நகர் அருகே மன்னார்புரம் பகுதியில் கடந்த 15.5.2022 அன்று அதிகாலை 4:30 மணிக்கு மளிகை கடைக்காரர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் திருடிய ராஜேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்து வந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை விதித்து திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

புலிகரை அருகே உள்ள கோவிலூரில் லாரி ஒன்று உயரத்தில் வைக்கோல் ஏற்றியதால் மின் கம்பியில் உரசி தீ பற்றியது. இதை அறிந்த ஓட்டுனர் வாகனத்தை வேகமாக ஒட்டி ஊரை விட்டு வெளிப்புறத்திற்கு கொண்டு சென்றார் .ஊர் பொதுமக்கள் அருகே இருந்த போர்வெல்லில் நீரை கொண்டு வந்து ஊற்றியும், மண்ணை தூவியும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணம் வினியோகம், தேர்தல் விளம்பரம் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், உதவி தேர்தல் அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் சுவர்களில் பல்வேறு கட்சிகளின் சின்னங்களை விளம்பரம் செய்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோடு ஜவகர் இல்லம் காங்கிரஸ் அலுவலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில், இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், சம்பத் நகர்- நசியனூர் சாலை சந்திப்பு பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ஒளிரும் சட்டைகள் வழங்கப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் மணிஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி இருந்தனர்.

ஈரோடு அடுத்த காலிங்கராயன்பாளையம் பகுதியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ரூ.10,35,000 மதிப்புள்ள சேலைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த சேலைகள், ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. எனவே பறக்கும் படையினர் அளித்த புகாரில் அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.