Tamilnadu

News March 28, 2024

வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்

image

மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு நெல்லையில் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து வேட்பு மனுவை திரும்ப பெற நினைக்கும் வேட்பாளர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

image

குன்னூர் அருவங்காடு கிளை நூலகம் மற்றும் செந்தமிழ் சங்கம் சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி பெறுபவர்களுக்கு வாராந்திர மாதிரி தேர்வும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தேர்வை இல்லம் தேடி கல்வியின் தேர்வுகளை பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி நடத்தினார்.

News March 28, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு ஏற்பு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் மனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் இளைய குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

News March 28, 2024

பாஜகவில் இணைந்த மருத்துவர்

image

திருவாரூரில் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் (28.3.24) இன்று பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக இணைந்த மருத்துவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News March 28, 2024

விழுப்புரத்தில் நாதக, பாமக வேட்பு மனுக்கள் ஏற்பு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை வேட்பாளருக்கான மனுக்கள் சரிபார்த்தல் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமை தாங்கினார். இதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் ஆகிய இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

News March 28, 2024

நெல்லை: மகிழ்ச்சியான செய்தி

image

நெல்லை தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் மீன்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த கணக்கெடுப்பு பணியின்போது பாபநாசம் பகுதியில் நீர் நாய்கள் காணப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும். இது போன்ற உயிரினங்கள்தான் தாமிரபரணியை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றன என நெல்லையில் நேற்று (மார்ச் 27) மீன் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

News March 28, 2024

தஞ்சையில் கோலம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

image

தஞ்சாவூர் மாநகராட்சி மேலவீதியில் மாநகராட்சி சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நேர்மையாக 100% வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு வண்ண கோலப் போட்டி இன்று(மார்ச் 28) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வமுடன் கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 28, 2024

வேலூர் முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேச்சையாக போட்டியிடும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும். கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்தார்.

News March 28, 2024

தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த பெருமணம் கிராமத்தில் கூட்டத்திற்கான ஆலோசனை மற்றும் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு  திமுக உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

News March 28, 2024

நீலகிரியில் ஆ.ராசா, எல்.முருகன் வேட்புமனுக்கள் ஏற்பு

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றுவருகிறது. அதன்படி, நீலகிரி தொகுதியை பொறுத்தமட்டில், திமுக வேட்பாளர் ஆ.ராசா, பாஜக வேட்பாளர் எல்.முருகன், அதிமுக லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாதக உள்ளிட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ளன.

error: Content is protected !!