India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 4 விசைப்படகு விடுவிக்க வலியுறுத்தியும் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வரும் 4 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட உள்ளனர்.

சு.வெங்கடேசன் பெயரில் அசையும் சொத்து ரூ.98,26,389, அவரது மனைவி பெயரில் ரூ.91,16,165 சொத்து உள்ளது. பூர்வீக சொத்து, மகள் பெயரில் உள்ள சொத்து எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 389 உள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்து உள்ளார்.
2019 தேர்தலின் போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்து மொத்தம் 19 லட்சம் என்று கணக்கு காட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்துள்ளது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உதயமானது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட நீதிமன்றம் திறக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்ற திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான காவல் பார்வையாளர் ரோகன் பி.கனாய் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் வாக்குப்பதிவு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல், பரிசீலனை அனைத்தும் முடிவுற்று பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை, நீலகிரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் ஏப். 29 ஆம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் P.ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

சிவகாசியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று(மார்ச்.28) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் முறைகேட்டை ஆதாரப்பூர்வமாக ஆளுநரிடம் அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் நடுநிலையோடு நடக்க வேண்டும்” என கூறினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்டதாகவும் 13 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி என்று (மார்ச் 28) தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 96 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில் இன்று (மார்ச் 28) 100.6°F பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆங்கில பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், 31 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 419 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.