Tamilnadu

News March 28, 2024

தூத்துக்குடி: அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

News March 28, 2024

அதிமுக நிர்வாகி மகனை கைது செய்யக்கோரி சாலை மறியல்

image

புதுக்கோட்டை, அறந்தாங்கியை அடுத்த திருவாப்பாடியில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் சடலம் 27 ஆம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. விக்னேஷ் மரணத்திற்கு அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ்வேந்தன் , அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோர்தான் காரணம் எனக் கூறிய அவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவப்பாடியில் விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News March 28, 2024

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

image

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன்பு வரக்கூடிய வியாழக்கிழமை கிறிஸ்தவர்களால் கட்டளை வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கட்டளை வியாழக்கிழமையான இன்று விருத்தாசலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

image

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 28, 2024

திண்டுக்கல் பணி நிறைவு பாராட்டு விழா

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024 தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் D.சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் C.மைக்கேல் டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் G.குமாரபாண்டியன் , உட்பட மாவட்ட காவல் எஸ்.பி பிரதீப், நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News March 28, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

திண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் அறிமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் கயிலை ராஜனை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

நாகையில் 26 பேரில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

image

நாகை நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 26, வேட்பு மனுக்களில் 9, வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ் ,அதிமுகவின் சுர்ஜித் சங்கர், பாரதிய ஜனதா கட்சியின் ரமேஷ், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்ளிட்ட 9 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன

News March 28, 2024

சிவகங்கை: கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஆய்வு

image

சிவகங்கை மாவட்டம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக பொது தேர்தல் பார்வையாளர் ஹரிஷ், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார், திரிபாதி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று (மார்ச்-28)இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

News March 28, 2024

சென்னை: மதுபான விடுதி விபத்து: 2 பேர் பலி?

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட விபத்தில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 28, 2024

காரைக்காலில் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி வாகனங்கள், பேருந்துகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், மதுபானம், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

error: Content is protected !!