Tamilnadu

News March 30, 2024

மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

image

பழனி முருகன் கோயிலில் இன்று பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். மலை மீது ரூ.100 கட்டணம் தரிசன வழியில் இரண்டு மணி நேரமும் நேரமும், கட்டணமில்லா பொது தரிசனம் வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

News March 30, 2024

திருவள்ளூர்: 4.38 லட்சம் லிட்டர் ஆயில் பறிமுதல்

image

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

News March 30, 2024

வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

image

ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல் தலைமையிலான பறக்கும் படையினர் மையனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய சில குழுவினர், அதிகாரிகளை பார்த்து பொருட்களை விட்டுச் சென்றனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா,  6 பறவைகளை மீட்டனர். 

News March 30, 2024

சோதனை சாவடியில் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று இரவு வாஞ்சுயூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்களா சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

News March 30, 2024

பிரபல நடிகை கோவிலில் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல சீரியல் நடிகைக்கு சிறப்பான வரவேற்பும் கோவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ஏராளமான குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

News March 30, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 30, 2024

விருதுநகர் அருகே விபத்து; இருவரின் நிலை?

image

அருப்புக்கோட்டை அருகே குல்லம்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (24). இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி தனது நண்பர் ராம்குமார் என்பவர் உடன் பைக்கில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமலிங்காமில் அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து இருவரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2024

திருச்சி:அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

image

திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மலைக்கோட்டை பகுதியில் உள்ள சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது மலைக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

News March 30, 2024

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.

News March 30, 2024

விவசாயி வீட்டில் கொள்ளை: இரண்டு பெண்கள் கைது

image

வந்தவாசி அருகே தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மெய்யப்பன் வீட்டில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த வீட்டில் பின்பக்க கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நேற்று  செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் கிராமத்தை சேர்ந்த கல்பனா, காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்களை நகை திருடிய வழக்கில் தெள்ளார் போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!