India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் மது கடைகள் இன்று (ஏப்.17) முதல் மூன்று நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை நேற்று இரவே வாங்கிவிட்டு சென்றனர். வாக்கு பதிவு முடிந்து இனி 20ஆம் தேதிதான் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும்.

புதுக்கோட்டைக்கென தனியே தொகுதி இல்லாததால், முக்கியத் தலைவா்களின் பிரசாரம் இன்றி, குறிப்பிட்ட சில தலைவா்களின் பிரசாரத்துடன் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்காக அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலருமான வைகோ கந்தா்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. திருச்சி தொகுதியில் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா ,அமமுக சார்பில் செந்தில்நாதன்,நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி விழா வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி சித்ரா பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 05.47 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விதிமுறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் தொடா்பாக திமுக, காங்கிரஸ், பாஜக, நாம்தமிழர் உள்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மீது இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பூதலூர் அருகே வில்வராயன்பட்டியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை டாட்டா ஏசி வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அயனாவரத்தில் இருந்து பூதலூர் வரும் வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள வாய்காலில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இன்று 17 முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் உள்ளிட்ட மதுபானக்கடைகள் மூடப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராயபுரம் கல்லறை சாலையில் உள்ள மதுகடையில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலை மோதியது. 3 நாள் விடுமுறை என்பதால், சிலர் மொத்தமாக வாங்கி சென்றனர். அதிக மதுபாட்டில்கள் முன்கூட்டியே விற்றதால், விரும்பிய மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என புலம்பினர்.
Sorry, no posts matched your criteria.