India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவை தேர்தல் ஏப்19ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் (ம) மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135பி-ன் கீழ் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. திருச்சி தொகுதியில் அதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா ,அமமுக சார்பில் செந்தில்நாதன்,நாம் தமிழர் சார்பில் ராஜேஷ் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சேமிப்பு கணக்கு புத்தகம், பணியாளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட 13 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அசல் ஆவணங்களை ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் சென்று ஓட்டளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. நாமக்கல் தொகுதியில் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் தமிழ்மணி ,பாஜக சார்பில் ராமலிங்கம், நாம் தமிழர் சார்பில் கனிமொழி உட்பட 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

புதுக்கோட்டைக்கென தனியே தொகுதி இல்லாததால், முக்கியத் தலைவா்களின் பிரசாரம் இன்றி, குறிப்பிட்ட சில தலைவா்களின் பிரசாரத்துடன் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்காக அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலருமான வைகோ கந்தா்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு வாய் தகராறு காரணமாக சுகதேவ்(29) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றத்தில் ஈடுபட்ட செல்வம் அரவிந்த் பாலகுரு சிவசாமி சிவகுரு ஆகிய ஐவருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் நேற்று பிற்பகல் முதலே தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். பிரச்சார களத்தில் நெல்லை ஊடகவியலாளர்கள், ஒரே நேரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளை ஓடி ஓடி சென்று செய்தி சேகரிக்கின்றனர்.

சென்னையிலிருந்து நெல்லை வழியாக தென்காசிக்கு கோடைகால ரயில் அறிவிக்கப்படாதது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோடைகால சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நெல்லையில் கிளை வழித்தடங்களான குறிப்பாக சென்னை – திருநெல்வேலி – தென்காசி இடையே ரயில்கள் ஏதும் அறிவிக்கப்படாதது பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், மே. 1 தேதியும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.