India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 17.04.2024 மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி தலைமையில் கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலி கட்டி முன்னிலையில் நடைபெற்றது.

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று ஆட்சியர் வளாகத்துக்குள் தேர்தல் போலீஸ் ரோந்து பணிக்கு மற்றும் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்க காவல்துறை தயாரான நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட கால கோரிக்கையான தொல்லியல் ஆராய்ச்சி மையம் மற்றும் அருங்காட்சியகம் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை அறிவித்த பிறகும் தற்போது வரை அதற்கான எந்த முன்னெடுப்புகளும் எடுக்காமல் உள்ளது. அதை விரைவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து விரைவாக கட்டிடம் கட்டிக் தரப்படும் என விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் முரளி சங்கர் என வாக்குறுதி அளித்துள்ளார்.

மன்னார்குடி பகுதியில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் அருள் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒவ்வொருவரும் இந்தியா கூட்டணிக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி, லால்குடி அருகே ஐஜேகே கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ₹1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்து வீட்டின் கழிவறையில் பணத்தை பதுக்கியுள்ளார் வினோத்சந்திரன். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் சு. வெங்கடேசனுக்கு வாக்குகள் கேட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “பாஜக ஒரு பாசிச கட்சி. பொருளாதார அறிவு சற்றும் இல்லாத கட்சி. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், பாகிஸ்தானை விட மோசமான பொருளாதார நிலைமைக்கு இந்தியா சென்று விடும்” என கூறினார்.

நாகப்பட்டினம், நாயுடு அரங்கத்தில் இன்று, சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் வடிவேலன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அதில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தி இருக்கும் பாஜகவை எதிர்த்தும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறி இந்திய கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு, பணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி கடந்த 2011ல் வாக்குக்கு பணம் கொடுத்தாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் ஏப்ரல். 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் பணத்திற்காக விலை போக மாட்டோம் எங்கள் உரிமை ஓட்டு அதை நாங்கள் விற்கமாட்டோம் என நரிக்குறவர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே எங்கள் நறிக்குறவர்கள் குடியிருப்பு , பகுதிக்குள் வரும் கட்சி நிர்வாகிகள் யாரும் பணம் கொடுத்து எங்களை விலைக்கு வாங்க வேண்டாம் என பேனர் அடித்து தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.