Tamilnadu

News April 18, 2024

கடலூர் மாநகர மேயர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

image

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து இன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகர மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏராளமான திமுக கட்சி தொண்டர்கள் திரண்டு உள்ளனர்

News April 18, 2024

சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம்

image

ஏப்ரல் 18 வியாழக்கிழமை குமாரசாமிபேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகளும், மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் காலையில் பக்தர்கள் நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

News April 18, 2024

ராம்நாடு: தேர்தல் பணியில் 5614 பேர்

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பரமக்குடி தொகுதிக்கு 303 வாக்குப்பதிவு மையங்களும், திருவாடானைக்கு 347, ராமநாதபுரத்திற்கு 338, முதுகுளத்தூரில் 386 மையங்களும் என மொத்தம் 1,374 வாக்குப்பதிவு மையங்களுக்கும், ஒரு மையத்திற்கு வாக்குப்பதிவு மைய அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர் என்று 5,614 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

பாதுகாப்பு பணியில் காவலர்கள்

image

நாளை அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பணியில் மாவட்ட SP கிரண் ஸ்ருதி தலைமையில் 3 கூடுதல் SP மேற்பார்வையில், 6 துணை SP, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 986 காவல்துறையினரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 282 TSP காவலர்களும், 413 ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News April 18, 2024

கடலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

image

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

News April 18, 2024

பாதுகாப்பு பணியில் 2700 பேர் – எஸ்பி

image

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஊர்க்காவல் படைவீரர்கள் என மொத்தம் 2700 பேர் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். மாவட்டம் முழுவதும் 17 அதிவிரைவு படையினர், 16 விரைவு நடவடிக்கை குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 90 பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்தார்.

News April 18, 2024

வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த லாரி சுவரில் மோதி விபத்து

image

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளை வாகனங்களில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை ஏற்றிவந்த லாரி பின்பக்கமாக வரும்போது சுவரில் இடித்ததால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு ஏற்றப்பட்டன.

News April 18, 2024

கிருஷ்ணகிரி அருகே ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 18, 2024

தமிழக உளவுத்துறை மீது முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

image

ராதாபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை பாளையில் வைத்து செய்தியாளர்களை இன்று (ஏப். 18) சந்தித்தார். அப்போது, தமிழக அரசின் உளவுத்துறை அதிமுக கட்சியினரின் டெலிபோன் பேச்சுகளை ஒட்டு கேட்டு ஆளும் திமுக அரசு முதல்வருக்கு தகவல் அளிப்பதாக புகார் மனு தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. இது மனித சுதந்திரத்திற்கு எதிரானது என கூறினார்.

News April 18, 2024

வேலூர் எம்பி வேட்பாளருக்கு பிரதமர் மோடி கடிதம்

image

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேலூரில் நீங்கள் செய்த பணிக்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் பாராளுமன்றத்தை அடைவீர்கள் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!