India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அறிவுரை வழங்கினார்.

தாம்பரம் ரயில் நிலையம் அருகில் ஆவடி, திருபெருமந்தூர் செல்ல அரசு ஊழியர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காரணம் சேர் ஆட்டோ மற்றும் தனியார் பஸ்களால் பொது மக்களுக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துகின்றனர் என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கூடலூர், புனித தாமஸ் பள்ளியில் நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 19 தேதியன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் இன்று ( 18 தேதி ) வாக்குசாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது தொடர்பாக அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு . அருணா நேரில் ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.

இல்ல திருமணத்திற்கு வண்ணமயமான அழைப்பிதழ் அச்சிட்டு உறுப்பினர்களையும் நண்பர்களையும் அழைப்பது தமிழர் மரபு. நாளை (ஏப்.19) நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, ‘ஜனநாயக திருவிழா அழைப்பிதழ்’ என்ற பெயரில், திருமண அழைப்பிதழ் போல அச்சிடப்பட்ட அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அழைப்பிதழுக்கு, நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து ‘கமெண்ட்’ செய்து பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை, அயனாவரம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் ஏப்.13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5வது நாளான இன்று(ஏப்.18) இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி எழுந்தருளி, சப்பரத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற வருகைதருமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் மகாவீரர் ஜெயந்தி சேர்த்து மொத்தம் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படும்.தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தை தொட்டது.அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் 55 கோடியே 84 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி திருநெல்வேலி மக்களவை தொகுதி பொதுத்தேர்தல் நாளை (ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1810 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் நாளை தவறாது வாக்களித்திட தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் இன்று (ஏப்.18) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை பொதுத்தேர்தல் நாளை (ஏப்.19) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.18) திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஜனநாயக திருவிழா என்ற அழைப்பிதழ் நெல்லையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1,225 வாக்குச்சாவடிகளில் , 1469 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்கள், நிலை 1 முதல் 4 வரை என மொத்தம் 6,074 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான பணி கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான பணி ஆணை இன்று சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களில் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

தி.மலை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தி.மலை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணியினை திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.