Tamilnadu

News April 18, 2024

தூத்துக்குடி: 91.5% பூத் ஸ்லிப் விநியோகம்

image

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள 1,624 வாக்குச்சாவடிகளில் 14.58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு இதுவரை 91.5% பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்களுக்கு வாக்குச்சாவடியில் நிலை அலுவலர்களால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

image

மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

தி.மலை: காங்கிரசில் இணைந்த பாஜக நிர்வாகி

image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம் G.குமார் முன்னிலையில் பாஜக தொழிலாளர் பிரிவு மாவட்டத் செயலாளர் ரமேஷ் இன்று காங்கிரசில் இணைந்தார். இதில், காங்., நகர தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு CS ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக நிர்வாகியின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News April 18, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த <>லிங்-ஐ<<>> க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

தேனி: அடுத்த 3 மணி நேரத்திற்கு…

image

தேனி மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு – மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கம்பம், போடி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

வேலூர்: மின்சாரம் தாக்கிய சிறுவன்

image

அணைக்கட்டு, பெரிய தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (12) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் மொட்டை மாடியில் அபினேஷ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே செல்லும் மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி அபினேஷ் காயமடைந்தார். இதையடுத்து அபினேஷை அவரது பெற்றோர் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

News April 18, 2024

தென்காசி: நாளை விடுமுறை

image

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் காந்திஜி நூற்றாண்டு நினைவு காய்கறி சந்தையானது தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காந்திஜி நூற்றாண்டு நினைவு தினசரி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை என பதாகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வியாபாரிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று விடுமுறை அளித்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

News April 18, 2024

நாமக்கல்லில் வாக்கு மையம் தயார்

image

நாடாளுமன்ற தேர்தல் ஒட்டி நாமக்கல்லில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் கோட்டை தொடக்க பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.வாக்குப்பெட்டிகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.பதற்றமான வாக்குசாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

News April 18, 2024

விருதுநகர்: மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

image

தாயில்பட்டி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முருகராஜ் (38).இவருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் மடத்துப்பட்டியில் இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்த போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 18, 2024

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் 1480 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் பதற்றமான 52 வாக்கு மையங்களில் ஒவ்வொரு மையத்திலும் 1 காவலர் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!