India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வாக்குகளை செலுத்தினர். இதில் புதுச்சேரி முழுவதும் 78.80% வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக பாகூர் தொகுதியில் 88.76% வாக்குகளும், குறைந்தபட்சமாக மாகி தொகுதியில் 65.11% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் ஆர்த்திஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை (ஏப்.21) திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊர்க்காவல் படையினர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 540 கேமராக்கள் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

திருப்பத்தூர், ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் (ஏப்ரல்.19) நாச்சியார குப்பம் பகுதியை சேர்ந்த எழிலரசன்(47) (கூலி தொழிலாளி) இவரது பைக் மீது ஆலாங்குப்பம் முருகன் (55) என்பவரின் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பேர் படுகாயடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி எழிலரசன் உயிரிழந்தார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

வேதாரண்யம் அருகே உள்ள தென்னடார் ஊராட்சியில் நேற்று இரவு பாண்டியன் என்பவரது
வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வாய்மேடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை, ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வைகை அணை அருகிலுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை திருவிழாவிற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வரத்து அதிகரித்து சுழலில் சிக்கிய இருவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமுக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் இன்று (ஏப்.20) பூட்டி சீல் வைத்தனர்.

ராமநாதபுரம் அண்ணா பல்கலை கல்லூரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளிலும் ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு அதிகாரி என அறைக்கு மூன்று பேர் வீதம் 18 பேர், துணை ராணுவ படை வீரர்கள், பட்டாலியன் மற்றும் 195 உள்ளூர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என எஸ்பி சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நேற்று செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், தொகுதி முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய பின்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 1, கட்டுப்பாட்டு இயந்திரம் 2, வி.வி.பேட் இயந்திரம் 7 மட்டுமே பழுதாகி இருந்தது. அவை உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறை மூடி முத்திரையிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.