Tamilnadu

News April 21, 2024

மளிகை கடையில் பெட்ரோல் விற்றவர் தப்பி ஓட்டம்!

image

க. விலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிருந்தா தலைமையில் போலீசார் நேற்று அம்மச்சியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாயக்கண்ணன் என்பவர் தனது பெட்டி கடையில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசாரை கண்டதும் மாயக்கண்ணன் தம்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து, போலீசார் கடையை சோதனையிட்டு பத்து லிட்டர் பெட்ரோலை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News April 21, 2024

களை கட்டிய நாட்டுப்படகு மீன்பிடி: குவிந்த வியாபாரிகள்

image

தமிழக கடலில் மீன் வளம் காக்க ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்கால கட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் தவிர 5 நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப்படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாம்பன் கடலில் நாட்டுப்படகு மீன்பிடி கடந்த சில நாட்களாக களை கட்டியுள்ளது. கரை திரும்பும் படகுகளில் குவியும் மீன்களை கேரளா அனுப்ப வியாபாரிகள் இன்று குவிந்தனர்.

News April 21, 2024

கிருஷ்ணகிரி தொகுதி வாக்கு பதிவு நிலவரம்

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 71.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் 72.10%, பர்கூரில் 73.18%, கிருஷ்ணகிரியில் 73.13%, வேப்பனப்பள்ளியில் 74.99%, ஒசூரில் 67.03%, தளி தொகுதியில் 70.11% சதவீதம் என மொத்தம் 71.50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆண்கள் 5,87,007 பேர், பெண்கள் 5,73,412 பேர், இதர வாக்காளா்கள் 79 பேர் என மொத்தம் 11,60,498 பேர் வாக்களித்துள்ளனர்.

News April 21, 2024

ஈரோடு: மீண்டும் மது கடைகள் மூடல்

image

தமிழகத்தில் இன்று மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1ம் தேதி மே தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் நாளை மற்றும் மே 1ம் தேதி, அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

எட்டுக்குடி: சித்திரை பெருவிழா கோலாகலம்

image

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவான நேற்று இரவு ஓலைச் சப்ரத்தில் வெள்ளி ரிஷப வாகன சககோபுர காட்சி மின்விளக்கு அலங்காரத்தோடு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

News April 21, 2024

சென்னை: இறைச்சி கடைகள் மூடல்!

image

சமண சமயத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி தினம் இன்று(ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை முழுவதும் இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகள் விற்பனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி செயல்படும் கடைகள் மீது சீல் வைக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

திண்டுக்கல் வாக்குப்பதிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் கீழ் நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- மாநில தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையும், மத்திய தேர்தல் ஒரு அறிக்கையும் வெளியிட்டது. இதனால் எத்தனை சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றது. என அரசியல் பிரமுகர், பொது மக்கள் குழப்பம் அடைந்த நிலையில் நேற்று நள்ளிரவு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 71.14% வாக்கு பதிவானது என அதிகார பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News April 21, 2024

சேலம்: கிணற்றில் விழுந்த மான் மீட்பு

image

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோடம்பாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய விவசாய கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து செல்லப்பன் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டூர் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனபகுதியில் விட்டனர்.

News April 21, 2024

பாபநாசம் அருகே மின்சாரம் தாக்கி மயில் பலி

image

பாபநாசம் திருப்பாலைத்துறை ஆவுல்காரத் தெருவில் பறந்து வந்த மயில், மின்சார கம்பி அருகே சென்றபோது அதன் உடல் மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி நேற்று(ஏப்.20) மயில் இறந்தது. தகவலறிந்து உடனே சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை எடுத்து சென்று பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் புதைத்தனர்.

News April 21, 2024

திருச்சி அருகே ஆய்வாளருக்கு பலத்த காயம்

image

முசிறி அடுத்த அயித்தாம்பட்டியை சோ்ந்த தமிழ்ச்செல்வன். திருவெறும்பூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை பணியில் இருந்த இவா் நேற்று பணி முடித்து தனது  டூவீலரில் சென்ற போது ஏவூா் கருப்பு கோயில் அருகே சென்றபோது டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த முசிறி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

error: Content is protected !!