India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் வேல் (60). இவர் பொங்கலூர் அருகே உள்ள பொன்நகரில் தனது மகனுடன் வசித்துவருகிறார். இவர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பழங்களை வண்டியில் வைத்து வியாபாரம் செய்துவருகிறார். பழ வியாபாரி வேலை மர்ம நபர்கள் குத்திக்கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் பஸ் மற்றும் ரயில்களில் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தேவையான இடங்களுக்கு சிறப்பு பஸ் ரயிலில் இயக்கப்படுகின்றன. இன்று (ஏப்ரல் 22) மதியம் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் நாளை அதிகாலை 12.45 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளசூர் சந்திப்பு அருகே நேற்று (ஏப்ரல் 21) குறுக்கே பைக் வந்ததால் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்தது. அப்போது புதுச்சேரி நோக்கிச் சென்ற, ‘எட்டியாஸ்’ கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஆண்டுதோறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 1ஆம் தேதி காய்கறி கண்காட்சி நடத்துவது வழக்கம். நடப்பாண்டு லோக்சபா தேர்தல் காரணமாக காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துவருகிறது. வறட்சி காரணமாக கோத்தகிரி பூங்கா பசுமை இழந்து காணப்படுகிறது.

கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்று(ஏப்.22) எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இந்த ரயில் நெல்லை சென்றடையும்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஜான்சி என்பவரை திருமணம் செய்துள்ளார். புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல், தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம்(ஏப்.20) இதனை ஜான்சியின் தாய் வசந்தி தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த புஷ்பராஜ், வசந்தியை கட்டையால் ஆத்திரம் தீர அடித்துக் கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து, தலைமறைவான புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படும் நிலையில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்தில் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிகளுக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும் செல்ல கட்டுக்கடங்காத பெண்கள் கூட்டம் பேருந்து இடம் பிடிக்க முண்டியடித்து பேருந்தில் ஏறிக்கொண்டு இருக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வன்னியர் தெருவை சேர்ந்தவர் தாட்சாயணி(43). இவர் நேற்று(ஏப்.21) காலை வீட்டின் முன்னால் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதில் வாயில் நுரைத்தள்ளி கீழே விழுந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையிலும் தாட்சாயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல்(45), விவசாயி. இவர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை இவர் உழவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த வாழை ரக சீப் ஒன்று மிகப்பெரிய அளவில் இருந்தது. ஒரே சீப்பில் 42 வாழைப் பழங்கள் இருந்தன. அதன் எடை 3 கிலோ இருந்தது. இது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Sorry, no posts matched your criteria.