Tamilnadu

News April 24, 2024

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம்

image

பேராவூரணி பகுதியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்திரைத் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று(ஏப்.22)  நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், முருகன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News April 24, 2024

மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

image

புதுவை லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என். சி. சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் 225 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

News April 24, 2024

விழுப்புரம்: 91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

உடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

image

நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

News April 24, 2024

பேருந்து நிலையத்தில் யாசகர் பலி

image

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு 8வது பிளாட்பார்ம் அருகே அடையாளம் தெரியாத யாசகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக அந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

சிதம்பரத்தில் ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் கும்பாபிஷேகம் விழா

image

சிதம்பரம் குருவையர் தெருவில் உள்ள ஶ்ரீலஶ்ரீ அவதூத சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று முன்தினம்  நடைபெற்றது கோயில் விமான கலசத்திற்கு கும்பநீரை தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலஶ்ரீஅவதூத சுவாமிகள் ஆலய நிர்வாகிகள் செய்தனர்

News April 24, 2024

சித்ரா பௌர்ணமி திருவிளக்கு பூஜை

image

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஆண்டி விளை ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி கொடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். பூஜைகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News April 24, 2024

செங்கல்பட்டு: கும்பாபிஷேக விழா

image

வண்டலூர் சிங்கார தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஞான விநாயகர்,  முகாம்பிகை  ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிறகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தனர்.

News April 24, 2024

வண்டலூர் பூங்காவில் ராட்சத கழுகுகள் மாயம்

image

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,700க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ராட்சத கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வந்த கழுகுகள் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கழுகுகள் கிடைக்காததால் பூங்கா நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

News April 24, 2024

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

image

திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து அண்ணாமலையார் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதல் அதிக அளவில் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

error: Content is protected !!