India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பழனி அடுத்த பாப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து இரவு நேரத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் மிகக் குறைவாக வழங்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். மின்சார வாரிய அலட்சியப் போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக குற்றம் சாட்சி வருகின்றனர்..

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் உற்சவமும் தேர் வீதியுலா இன்று (ஏப்ரல்-23) தொடங்கியது. இந்த தேர் திருவிழாவில் செங்கல்பட்டு மட்டும் இல்லாமல் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி புனலூர் வழியாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 22) இரு மார்க்கத்திலும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபோல் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயிலும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. திடீர் ரத்து காரணமாக இந்த ரயிலை எதிர்பார்த்த பயணிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.22) கிருஷ்ணாபுரம் பொதுமக்களின் சார்பாக அம்மனின் புலி வாகன உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஆடல், பாடல், அன்னதானம், அம்மன் அலங்கார ஊர்வலம், சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில், இன்று(ஏப்.23) உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் டி.ராஜு சாமி தரிசனம் செய்தார். அவரை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் வான்மதி வரவேற்றார். அவருடன் வழக்கறிஞர்கள் தியாகராஜன், ரகுராமன், சம்பத், ஆறுமுகம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆம்பூர் சான்றோர்குப்பம் அடுத்த வண்ணான்துறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நகர போலிசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த ராஜாமணி. இவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் திருப்பத்தூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு சென்றபோது புதுக்கோட்டை சிப்காட் அருகே சாலையை கடக்க முயன்ற பெண்மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனிஷ்சாய் என்ற 2 வயது குழந்தை பலியானது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை மட்டும் சி விஜில் செயலி, ஆன்லைன், தொலைபேசி ஆகியவை வாயிலாக 3,278 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி பெற்ற புகார்களாக எடுக்கப்பட்ட 3059 புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த பழனியம்மாள் (45), நேற்று மதியம் தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஸ்கூட்டரில் மோதியது பழனியம்மாள் கீழே விழுந்தார். பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரியில் சக்கரம் அவரது தலை மீது ஏறி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார், லாரி டிரைவர் தப்பி ஓடினார்.போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு.
Sorry, no posts matched your criteria.