Tamilnadu

News April 24, 2024

தண்ணீர் வேண்டி பெண்கள் போராட்டம்

image

திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பகுதியில் கிராம மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என காலி குடங்களுடன் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு இன்று (ஏப்.22) போராட்டம் நடத்தினர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரும் போராட்டம் நடைபெறும் எனவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

கடலூர்: நீச்சல் பயிற்சி வரும் 28-ம் தேதி நிறைவு

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த 2-ம் கட்ட பயிற்சி வகுப்பானது வரும் 28ஆம் தேதி அன்று முடிவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

திருப்பத்தூரில் தொடரும் கண்காணிப்பு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

News April 24, 2024

கும்பகோணம் அருகே சாலையில் சிக்கிய தேர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் அமைந்துள்ளது சாரங்கபாணி திருக்கோயில். இக்கோயிலில் இன்று(ஏப்.23) தேர் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தேரின் சக்கரம் சாலையில் உள்வாங்கியுள்ளது. கோயிலின் 4 வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தபோது, 10 அடி பள்ளத்தில் சிக்கியது. 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை மேலே தூக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News April 24, 2024

சேலம்: ‘ஈரடுக்கு ரயில் நீட்டிப்பு’..!

image

பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ‘உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ்’ ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பாலக்காடு – கோவை – பெங்களூரு உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 24, 2024

தென்காசி அருகே 4 பேர் கைது

image

பாவூர்சத்திரம் சாலடியூர் விலக்கில் போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது 3 பைக்குகளில் சென்ற நான்கு பேரை தடுத்து சோதனை செய்தபோது அவர்கள் 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 310 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. மது பாட்டில்கள் கடத்திய ஆவுடையானூர் செல்வன் (52), லட்சுமியூர் சுடலை முருகன் (36), கல்லூரணி ஆனந்த் (35), கீழப்பாவூர் ராமராஜன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

News April 24, 2024

திருச்சி அருகே 11 பேர் சிக்கினர் 

image

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் மருதூர் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல் இறந்தவர்கள் பெயரிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும் ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும்,70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்று கூறினார்.

News April 24, 2024

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.6 குறைவு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.127-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.121 ஆனது. முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News April 24, 2024

புதுக்கோட்டை அருகே 3 பேர் கைது

image

அன்னவாசல் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதனையடுத்து அன்னவாசல் போலீசார் நேற்று சீகம்பட்டி மலையடி அருகே மது விற்ற அண்ணாமலை, தனியார் திருமண மண்டபம் அருகே மது விற்ற முத்துக்குமார், சித்தன்னவாசல் பெரியகுளம் அருகே மது விற்ற சின்னத்துரை ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

News April 24, 2024

அரக்கோணம்: சொத்து தகராறில் விரட்டி விரட்டி வெட்டு

image

அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரை சேர்ந்தவர் நரசிம்மன்(46). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு நரசிம்மனை ஒரு கும்பல் கத்தியால் வெட்டியது. உயிர் தப்பிக்க நரசிம்மன் அங்கும் இங்கும் ஓடினார். அப்போதும் அவரை விடாமல் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த நரசிம்மன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

error: Content is protected !!