India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான V.R.மாலுக்கு இன்று(ஏப்.23) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபமாகவே சென்னை மற்றும் பல இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலியில் மக்களவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பான முறையில் பணியாற்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று (ஏப்.23) முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சீர்காழி அருகே தாண்டவன்குளம் கன்னியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.நேற்றிரவு வான வேடிக்கை நடைபெற்றது. அப்போது வெடி விபத்து ஏற்பட்டு பக்தர்கள் கூட்டத்தில் வெடித்து சிதறியது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.

தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய மலை ஏறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்ற இளைஞர் மலை ஏறி விட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல்.23) ஆஜரானார். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, யாஷிகா ஆனந்தை வரும் மே 3 அன்று ஆஜராக உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.அதன்படி தேனி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

திருவாரூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் வடுவூர் சோழன் உடற்பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி வரும் 28.04.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மன்னார்குடி -தஞ்சாவூர் சாலையில் உள்ள வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட அமைச்சூர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.அதன்படி நேற்றைய வெயில் நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.அதில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.