Tamilnadu

News April 25, 2024

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி

image

புதுச்சேரி அரசுப்பணியாளர்களுக்கு ஓய்வுதியம், பணிக்கொடை (கிராஜுவிட்டி ), வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடகவும், ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.

News April 25, 2024

மதுரை: காவலரை தாக்கிய இருவர் கைது

image

டி.கல்லுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நேற்று சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அழகுராஜா தடுத்துள்ளார். அப்போது கே.சத்திரப்பட்டியை சேர்ந்த அழகுராஜா, தங்கபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து காவலர் அழகுராஜாவை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். காவலர் அளித்த புகாரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

விழுப்புரம்: கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

image

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2005ம் ஆண்டு நிலத்தகராறில், குலசேகரன், காத்தவராயம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 6 பேர் வழக்கு நடந்த காலங்களில் மரணமடைந்தனர். இவர்கள் தவிர்த்து மீதமுள்ள 20 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News April 25, 2024

அரசு பேருந்து கவிழ்ந்து பலி; 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

image

கும்பகோணத்தில் இருந்து இன்று(ஏப்.24) காலை தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அய்யம்பேட்டை ஸ்டார் லைன் கல்லூரி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் லட்சுமி(50) என்பவர் உயிரிழந்தார்.

News April 25, 2024

மத்திய அரசு சான்றிதழுடன் தொழில் பயிற்சி

image

மதுரை புதுார் தொழிற்பேட்டை MSME தொழில்நுட்ப அலுவலகத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி, பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே 2 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் இதில் கலந்துகொள்ளலாம். விரும்புவோர் 0452 – 2568313 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி..!

image

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வம் தலைமையிலான அதிகாரிகள் மெயின்ரோடு , கோவிந்தாபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 3 கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்து 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

News April 25, 2024

கலவை அருகே ஃபிரிட்ஜ் எரிந்து விபத்து!

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, மேல்நெல்லி கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரோஸ்(45). இவரது வீட்டில் இன்று(ஏப்.24) அதிகாலை 3 மணிக்கு மின் கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், அருகில் இருந்த 3 மூட்டை வேர்க்கடலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் எரிந்து சேதமானது. கலவை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

News April 25, 2024

காஞ்சிபுரத்தில் வெப்ப அலை!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

சேலத்தில் வெப்ப அலை!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி, ஆத்தூர், ஏற்காடு, சங்ககிரி, மேட்டூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வெப்ப அலை வீசி வருவதால், அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 25, 2024

நாட்டறம்பள்ளி அருகே கங்கை அம்மன் அலங்காரம்

image

நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று 24 ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது இவ்விழாவில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

error: Content is protected !!