Tamilnadu

News April 25, 2024

41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு

image

ஏஜி&பி பிரதான் நிறுவனம் சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் இணைப்பு விரிவாக்கம் குறித்து பிராந்திய மேலாளர் இசக்கி முத்து பூமாரி கூறியதாவது: ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க ஏஜி&பி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறப்பு திட்டத்தில் டெபாசிட் இல்லாத எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றார்.

News April 25, 2024

கடலூரில் போக்குவரத்து அலுவலகம் வெறிச்சோடிய காட்சி

image

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க ஒன்றிப்பு ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொழிலாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

News April 25, 2024

கோடைக்கால குடிநீர் பந்தல்

image

திண்டுக்கல் நகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்.24) கோடை கால வெயிலின் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரும் தனியார் மாத பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். துவக்க நாளான இன்று நீர்மோர், தர்பூசணி பழம், குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

News April 25, 2024

மழைநீர் வடிகால் மேயர் ஆய்வு

image

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்தப் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 25, 2024

நாமக்கல் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 27 முதல் மே 8 வரை நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59 செலுத்தி நீந்தலாம்.
மேலும் விபரங்களுக்கு பயிற்சியாளர் சிங்குதுரையை  8508641786 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.

News April 25, 2024

சபாநாயகர் புகாருக்கு இயக்குனர் பதில்

image

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலத்தை தனியார் தொழில் அபிவிருத்தி நிறுவனம் மோசடி செய்ததாக சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து ஏஎம்ஆர்எல் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 985 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவன இயக்குநர் பேரவை தலைவருக்கு இன்று பதில் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

விருதுநகர்: கடைகளுக்கு அபராதம்

image

அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்தவும் அறிவுறுத்தினர்.

News April 25, 2024

திருச்சியில் போதை மாத்திரை விற்றவர் கைது

image

திருவெறும்பூர் அருகே காட்டூர் அண்ணா நகர் குருவி மண்டபம் பகுதியில் போதை மாத்திரை இருப்பதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர், ரியாஸ்கான் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது அரியமங்கலத்தை சேர்ந்த நஸ்ருதீன் போதை மாத்திரைகளை விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 26,250 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நஸ்ருதீனை கைது செய்தனர்.

News April 25, 2024

புதுகையில் இருவா் கைது

image

புதுக்கோட்டை நகரில் 1.9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். வல்லத்திராக்கோட்டை அருகே கத்தக்குறிச்சி சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் ஜெய ரவிவர்மா விஏஓவாக இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்.

News April 25, 2024

நாமக்கல்: கல்லூரியில் கல்லூரி கனவு குறித்த கருத்தரங்கு

image

ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கான என் கல்லூரி கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தனி தாசில்தார் பிரகாஷ் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராஜா ஜெகஜீவன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர்.

error: Content is protected !!