Tamilnadu

News May 14, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் உறவினர் மீது வழக்கு பதிவு

image

திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி தனியார் இன்டர்நெட் கேபிளை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் அக்காவின் மகன் சந்திரகுமார் (30) நிறுவனத்தின் மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். திருவேற்காடு போலீசார் நேற்று இரவு வழக்கு பதிந்து சந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

News May 14, 2024

தூத்துக்குடியில் மே.22 இல் உள்ளூர் விடுமுறை

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா வரும் 22ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜூன் மாதம் 8 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

விழுப்புரம் அருகே விபத்து: லாரி ஓட்டுநர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் கூட்டு சாலை அருகே தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து செஞ்சி வழியாக சேத்பட் மார்க்கமாக திராட்சை ஏற்றி சென்ற லாரியும், மேல்மலையனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தேனி மாவட்டம் கம்பம் அடுத்த பூசாணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News May 14, 2024

கோவை : மழைப்பொழிவு விவரம்

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று பதிவான மழைப்பொழிவு விவரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது அதன்படி, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி பகுதியில் 8 செ.மீட்டரும், பொள்ளாச்சியில் 7 செ.மீட்டரும், ஆழியார் பகுதியில் 6 செ.மீட்டரும், சின்கோனா பகுதியில் 5 செ.மீட்டரும், சின்னக்கல்லார், வால்பாறை PAP, வால்பாறை PTO, போன்ற பிற பகுதிகளில் 2 செ.மீட்ட்ரும் மழைப் பதிவானது.

News May 14, 2024

அரியலூரில் 49 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

அரியலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு அரசு பள்ளிகள் 18, ஆதிதிராவிடர் நலப்பள்ளி 01, உதவி பெறும் பள்ளிகள் 5, சுயநிதி பள்ளிகள் 8, மெட்ரிக் பள்ளிகள் 17, என அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 49 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

News May 14, 2024

அரசு பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 லேப்டாப், இண்டக்சன் ஸ்டவ், ஸ்பீக்கர், போன் உள்ளிட்ட ரூ.75865 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போனது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News May 14, 2024

எல்லைப்பட்டி பக்தர்கள் கலசங்களுடன் பாதயாத்திரை

image

திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட எல்லைபட்டி கிராம மக்கள் விரதமிருந்து காப்பு கட்டி 108- தீர்த்த கவசங்களுடன் இன்று எல்லைப்பட்டியில் இருந்து ராமலிங்கபுரத்தில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!