Tamilnadu

News May 15, 2024

குமரி: கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 15, 2024

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

image

கன்னியாகுமரி, தென்தாமரைகுளம் பகுதியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை புதுக்கிராமம் அணியும், மூன்றாவது இடத்தை நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணியும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

News May 15, 2024

மோசடியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர் கைது

image

திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்து வழக்கில் சிக்கிக் கொண்ட வாகனத்தை எடுத்து தருவதாக கூறி லாரியின் உரிமையாளரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில் இன்று திருநாவலூர் போலீஸ் பத்திரிக்கையாளர் செல்வராஜை என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

News May 15, 2024

தர வரிசையில் அடுத்தடுத்த 3 மாவட்டங்கள்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகியவை அண்டை மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்கள் பிளஸ் 1 தேர்வில் மாநில அளவில் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் 93.86% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 10ம் இடம் பிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் 93.32 சதவீதம் தேர்ச்சி பெற்று 11வது இடமும், தென்காசி மாவட்டம் 93.02% தேர்ச்சி பெற்று 12ஆம் இடமும் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் பெற்றுள்ளது.

News May 15, 2024

நாகை: ஊராட்சி செயலாளரை தாக்கியவர் கைது

image

காரையூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிபவர் பிரபாகரன். அதே ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவராக வெங்கடசலம் பணிபுரிகிறார். இந்நிலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி போவது குறித்து பிரபாகரன் வெங்கடாசலத்திடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடாசலம் பிரபாகரனை இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் திருக்கண்ணபுரம் போலீசார் வெங்கடாசலத்தை நேற்று கைது செய்தனர்.

News May 15, 2024

அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

image

ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் கல்வி சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தகவல்.

News May 15, 2024

நாட்டுப் படகுகள் ஆய்வு – ஆட்சியர் அறிக்கை

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் மே 22-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும் என்றார்.

News May 15, 2024

UPDATE: மெட்ரோ சேவை நாள் முழுவதும் ரத்து

image

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.

News May 15, 2024

மினி ஸ்டேடியம் – 3 கோடியில் திட்டம்

image

மானாமதுரை திருப்பத்தூர் தொகுதிகளில் மாங்குளம் ,காரையூர் மினி ஸ்டேடியம் கட்ட இடம் தேர்வு செய்தனர். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வருவாய்துறையிடம் இருந்து மாவட்ட விளையாட்டு ஆணையத்திடம் நிலங்களை ஒப்படைத்த பின், மினி ஸ்டேடியத்திற்கான கட்டுமான பணி துவங்கும். இங்கு 400மீ., ஓடுதளம் ,வாலிபால்,கூடைப்பந்து, கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான
கட்டுமான வசதிகள் செய்யப்படும்.

News May 15, 2024

புதுவை தாகூா் அரசுக் கல்லூரி வளாகம் சுற்றுலாத் தலமாக அங்கீகரிப்பு

image

புதுவை தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியை கட்டாயம் பாா்க்க வேண்டிய இடமாக மத்திய அரசின் சுற்றுலாத் துறை அங்கீகரித்து உள்ளதாக கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் நேற்று தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் பசுமை புதுச்சேரி எனும் பொருளில் நகா்ப்புற காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 110- க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 7, 000 தாவரங்கள், மயில் உள்ளிட்ட 25 வகை பறவைகள், 30 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

error: Content is protected !!