India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <

அரக்கோணம் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி கட்டணம் இல்லை. 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜுன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலம். கூடுதல் விவரங்களுக்கு 04177232616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றன எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முடக்கப்பட்டுள்ளதாக மக்கள் நலவாழ்வுத்துறை தகவல் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை காயவைத்து பருக வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 15.05.2024 முதல் 17.05.2024 ஆகிய நாட்களுக்கு மிதமான மழையும்.18.05.2024 மற்றும் 19.05.2024 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை இருக்கும் அதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகள், ஆற்று ஓரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நாளை (மே.16) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (15/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் நந்தகுமார், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பலராமன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.