India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காங்கேயம் பஸ் நிலையத்திலிருந்து பழைய கோட்டை சாலை போக்குவரத்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்தச் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

திருவள்ளூர் அருகே நத்தமேடு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் பெயரில் வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நிலங்களை மீட்கும் வகையில் பதாகைகளை வைத்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை மீட்கப்படும் எனத் தெரிவித்தனர்.

நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து நீலகிரியில் வறட்சி நிலவியது. இதனால் வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி கிராம பகுதிகளில் நுழைந்தன. விவசாய பயிர்களைச் சேதப்படுத்தின. மனித-விலங்கு மோதல்கள் ஏற்பட்டுவந்தன. இந்த நிலையில் சமீபத்திய மழை பொழிவால் வனப்பகுதிகள் பசுமைக்குத் திரும்பி வருகின்றன. இதனால் வனத்தீ அபாயம் முடிவுக்கு வந்ததாக வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் படி பழனி உட்கொண்ட காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அனைவரும் பழனியில் உள்ள லாட்ஜ், மண்டபங்கள் மற்றும் விடுதிகளில் பாலியல் தொழில் நடக்கிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் பெய்து வரும் தொடா் மழையால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வாா்டு நேற்று அமைக்கப்பட்டுள்ளது. 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டில் கொசுவலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மே 14 முதல் கோடை மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியாகி உள்ளது. இந்நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகளவாக பாம்பன் 29 மிமீ, தங்கச்சிமடம் 18.60 மிமீ, மண்டபம் 11.80 மிமீ, வாலிநோக்கம் 5.60 மிமீ, ராமேஸ்வரம் 5.50 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண் துறை தெரிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு ‘கல்லூரிக் கனவு’ இரண்டாம் கட்ட நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்லூரிப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (மே 16) இரவு கன மழை வெளுத்து வாங்கியது. இந்த
நிலையில் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமாக 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நெல்லை மாநகர பகுதியில் 9.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்தனூர் ஊராட்சி சென்ன சமுத்திரம் கூட்ரோடு பெங்களூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேல்பள்ளிபட்டு செல்லும் கிராம சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டு குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நாள்தோறும், மாணவர்கள் விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் முக்கியமான இந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Sorry, no posts matched your criteria.