India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த கண்டமங்கலம் குழுவின் நிலையத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் நாளை (மே.20) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கொத்தமங்கலம் உயர் அழுத்த மின் பாதையில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சூலப்புரம் கிராமத்தில் கீழடியை போல தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன.
சூலபுரத்தில் தனியார் தோட்டத்தில், அண்மையில் பள்ளம் தோண்டியபோது பழமையான 1,500 சூதுபவள மணிகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது எனத் தெரிய வந்தது.
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மாலைகள் நேற்று முதல், வரும் 31ம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை பரவையில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருபவர் கோபால். இவர் இன்று அதிகாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கோபால் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த மதுரை கூடல் புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில் உள்ள அரசு, தனியார் ஐடிஐகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என ஆட்சியர் கார்த்தியின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தார். அதில், விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூன்.7ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு 8903709298, 9486251843, 9499055790 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைக்குப் பின் காய்ந்த சோகைகளுக்கு தீ வைப்பதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன. மண்வளம் கெடுவதோடு புகையினால் காற்று மாசடைகிறது. நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகளும் அழிகிறது. எனவே காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம். அந்த சோகைகளை இயந்திரம் மூலம் தூளாக்கி அதனை அங்க உரமாக பயிர்களுக்கு பயன்படுத்துமாறு தேனி மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் கோடை விடுமுறையில் நாகர்கோவிலில் இருந்து திப்ருகாருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வரும் மே24, ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் ஜூன் 26 (ம) ஜூலை 3 ஆகிய தேதிகளில் திப்ருகாரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் என அறிவித்துள்ளனர்.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் மே.22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே.24ஆம் தேதி மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் வரும் ஜூன்.3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் ஜூன்.3ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை 101 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (மே.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில், திமுகவினர் அனைவரும் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூரில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

விழுப்புரம்,திண்டிவனம் அடுத்த மயிலம் காவல்துறையினர் நேற்று (மே 18) இரு இளைஞர்களை கஞ்சா வழக்கில் கைது செய்தனர். மயிலம் சுடுகாட்டில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதை சமூக அலுவலர்கள் காவல்துறைக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். இது தொடர்பாக கூட்டேரிப்பட்டு சந்தோஷ் மயிலம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர்களை மயிலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.