India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் குண்டுமல்லி கடந்த வாரம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் வரத்து குறைவின் காரணமாகவும், இன்று முகூர்த்த தினம் என்பதாலும் அதிரடியாக விலை உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.360க்கு விற்கப்பட்ட குண்டு மல்லி, நேற்று ஒரே நாளில் ரூ.140 உயர்ந்து 1 கிலோ ரூ.500க்கு விற்பனையானது. அதேபோன்று ரூ.200க்கு விற்கப்பட்ட சன்னமல்லி, பட்டர் ரோஸ் நேற்று ரூ.400க்கு விற்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட நெல்வாய் கருக்கிலி , சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (20) இவர் கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் பெற்றோர் தரப்பில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன காமாட்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் படிக்கட்டில் தனது செல்போன் பார்த்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது, தவறி விழுந்த நபர் அதே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.

துறையூர் அருகே வசித்து வருபவர் மணிமாறன் (39). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் உறவினர் வீட்டின் விசேஷத்திற்காக நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து 10 பவுன் திருடிச் சென்றனர்.இது குறித்து தகவலின் பேரில் மணிமாறன் துறையூர் போலீசாரிடம் புகாரின் அளித்தார்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா் மழையால் அருவிகளில் நேற்று நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேல் மலைப் பகுதிகளான கீழானவயல், மன்னவனூா் , கவுஞ்சி, போலூா் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளி நீா் அருவி, பாம்பாா் அருவி, உள்ளிட்ட பல்வேறு நீரோடைகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

நெல்லை, வள்ளியூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் குமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்த நவீன் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழையால் சாலையில் தண்ணீர் தேங்கிய நிலையில், வாகனம் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சைதாப்பேட்டையில் கௌதம் (23) என்பவர் ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த கௌதமை, அப்பெண்ணின் முதல் கணவர் ராஜ்கிரண் உட்பட 6 நபர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் தொடர்புடைய 3 நபர்கள் கடந்த 16ஆம் தேதி கைதாகினர். இந்நிலையில் நேற்று ராஜ்கிரண், மணி, சுகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும், மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டுமென நள்ளிரவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இன்று மே 19-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நாமக்கல்லில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. எனவே கொல்லிமலை சுற்றுலா பகுதிகளில் உள்ள அருவிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவைப் பொறுத்து மறு அறிவிப்பு வெளியாகும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.